Farm Info

Friday, 14 August 2020 09:38 AM , by: Elavarse Sivakumar

தமிழகம் முழுவதும் வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வருகின்ற 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல மாவட்டங்களில், வாழையில் பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவை, இயற்கை சீற்றங்களால், பாதிக்கப்படும்போது, வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

அவ்வாறு நஷ்டமையும்போது,  நிதிச்சுமையை எதிர்கொள்ளும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு  பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை (Pradhan Mantri Fasal Bima Yojana PMFBY)  செயல்படுத்தி வருகிறது.

எனவே, வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளை, காப்பீடு செய்ய வைக்கும் பணிகளில், தோட்டக்கலை துறையினர் கவனம் செலுத்துகின்றனர்.

Credit:Hindu Tamil

வாழை சாகுபடி தீவிரம்

தற்போது, பல்வேறு மாவட்டங்களில், வாழை சாகுபடி துவங்கியுள்ளது. இவ்வாறு, வாழை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, ரூ.3,211 கட்டணம் செலுத்தி, வருகின்ற 31ம் தேதிக்குள், பயிர் காப்பீடு செய்ய, கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

பயிர் கடன் பெற்ற விவசாயிகள், வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள், அரசின் பொது சேவை மையங்களிலும், ஆன்லைன் வாயிலாகவும் பிரீமியம் தொகையைச் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காப்பீடு செய்வதால், குறைந்தபட்சம் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

உங்கள் பயிருக்கு பாதுகாப்பு அரண் எது தெரியுமா?- விபரம் உள்ளே!

கொட்டித் தீர்க்கும் பருவமழையால், கிடுகிடுவென நிரம்பும் அணைகள்- கரையோர மக்களுக்கு காத்திருக்கிறது அபாயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)