Krishi Jagran Tamil
Menu Close Menu

வெறும் 12 ரூபாயில், ரூ.2 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு பெற விருப்பமா? - விபரம் உள்ளே!

Monday, 03 August 2020 05:19 PM , by: Elavarse Sivakumar
Accident Policy at Rs.12

இழப்பு, இன்னல் இவை இரண்டுமே நம்மை எதிர்கொள்ளும்போது, அடுத்த என்ன செய்வது என்பது தெரியாமல் அதிர்ந்து போவது இயற்கை.

இத்தகைய வேளையில், நமக்கு உதவுவது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாம் சேர்த்து வைத்திருக்கும், பணமும், காப்பீடும்தான்.

மத்திய அரசின் திட்டம்

அந்த வகையில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் பயனடைய வேண்டும் என்பதற்காக, மிகக் குறைந்த ப்ரிமியம் தொகை செலுத்தும் வகையில், முக்கியக் காப்பீட்டுத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அதில் ஒன்றுதான்  பிரதான் மந்திரி சுரெக்க்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana) என்னும் விபத்து காப்பீடு திட்டம். எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணம் அடைய நேர்ந்தால், 2 லட்சம் ரூபாய் இழப்பட்டுத் தொகையாக வழங்கப்படும்.
அதேநேரத்தில், உடல் ஊனம் ஏதேனும் ஏற்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும். இதில் கண் , கை கால்கள் செயல்பட முடியாமல் போவது அடங்கும்.

இணைவது எப்படி?

இந்தத் திட்டத்தின் படி ஆண்டிற்கு 12 ரூபாயை ப்ரிமியம் தொகையாகச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த காப்பீடு செல்லுபடியாகும். ஓராண்டுக்கு ஒருமுறை காப்பீட்டுத் தொகையை செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.

தகுதி

 • 18 முதல் 70 வயத்திற்கு உட்பட்டவர்கள் இந்த பாலிசியை எடுக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். 

 • வெளிநாடுவாழ் இந்தியர்கள் (NRI) கூட காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். காப்பீடு தொகை வழங்கப்படும்போது இந்திய ரூபாயில்தான் பணம் செலுத்தப்படும்.

வங்கிக் கணக்கு

இந்த காப்பீடை எடுக்க வேண்டுமானால், நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டியது கட்டாயம். பல வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், ஏதேனும் ஒரு வங்கிக்கணக்கின் மூலம் இந்த திட்டத்தில் இணையலாம். கூட்டுக்கணக்கு (Joint Account)வைத்திருந்தால், வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த காப்பீடை எடுத்துக்கொள்ளலாம்.

Credit: Good return tamil

ஆன்லைன் சேவை

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள், http://www.jansuraksha.gov.in/Forms-PMSBY.aspx
என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

சில வங்கிகளில், எஸ்எம்எஸ் (SMS-based enrolment ) மற்றும் நெட் பேங்கிங் (net banking ) மூலமும் இணைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் உள்ளிட்ட வங்கிகளின் கிளைகளை நேரில் அனுகியும் பிரதான் மந்திரி சுரெக்க்ஷா பிமா யோஜனா திட்டத்தில் இணையலாம்.

ப்ரிமியம் செலுத்தும் வசதி

இந்த காப்பீட்டிற்கான ப்ரிமியம் தொகையை வங்கியிலேயே செலுத்தலாம். அவ்வாறு உங்கள் வங்கிக்கணக்கில் இருந்தே ப்ரிமியம் தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டுமானால், வங்கிகளில் இதுதொடர்பான தகவலை அளிக்க வேண்டும். இதைத்தவிர இன்சூரன்ஸ் ஏஜென்ட்களையும் தொடர்பு கொண்டும் இணையலாம்.

மேலும் படிக்க...

தினமும் ரூ.17 செலுத்தி லட்சாதிபதியாக வேண்டுமா? அப்படியானால் உங்களுக்குதான் இந்த தகவல்!

மாதம்100 ரூபாய் உங்களால் சேமிக்க முடியுமா? அதற்கு கைகொடுக்கும் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டம்!

விபத்து காப்பீடுத் திட்டம் மத்திய அரசின் முயற்சி ரூ.12 ல் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு
English Summary: Want to get accident insurance for just 12 rupees Per year? - Details inside!

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. பாரம்பரிய காய்கறி சாகுபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
 2. மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!
 3. அங்ககச் சான்று பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
 4. 100% மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு : பெண் பயனாளிகள் செப்., 29க்குள் விண்ணப்பிக்கலாம்!!
 5. நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்! விவசாயிகளுக்கு பயனளிக்குமா?
 6. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை வாய்ப்பு- வானிலை மையம்!!
 7. தென்னையில் இலைக்கருகல் நோய்- தீர்க்க என்ன வழி?
 8. பல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு!
 9. தோட்டத்துத் தேவதைகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு? விபரம் உள்ளே!
 10. பண்ணைக் குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.