ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியமாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மின் மோட்டார் (Electric motor)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் வேளாண் நிலம் மேம்பாட்டிற்காகப் பல்வேறுத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக, புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு 2000 விவசாயிகளுக்கு தலா ரூ.10,000/- மானியமாக ரூ.2 கோடி தாட்கோ மூலம் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
200 விவசாயிகளுக்கு (For 200 farmers)
இதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தங்கள் வேளாண் நில மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில் புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு 2000 விவசாயிகளுக்கு தலா ரூ.10,000/- மானியமாக வழங்கப்படும். ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 1800 விவசாயிகளுக்கும் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 200 விவசாயிகளுக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ரூ.10,000 மானியம் (Rs.10,000 grant)
இதன்படி அவர்கள், தங்கள் நில மேம்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் புதிய மின்மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில், புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு ஒரு விவசாயிக்கு ரூ.10,000/- வீதம் மானியம் கிடைக்கும்.
2000 விவசாயிகளுக்கு (For 2000 farmers)
மொத்தம் 2000 விவசாயிகள் பயன் பெறும் வகையில் 2 கோடி ரூபாயை, தாட்கோ மூலம் விடுவிக்க நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!
நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!