1. தோட்டக்கலை

பசுமைக் காடு வளர்ப்பு திட்டம்: 3.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டமா?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Green afforestation project

ஆண்டுதோறும் பருவநிலை மாற்றமடைந்து வருகிறது. திடீரென வெயில் சுட்டெறிக்கிறது, இல்லையென்றால் மழை கொட்டித்தீர்க்கிறது. இந்நிலையில், இந்த மாற்றத்துக்கு ஒரே தீர்வு, மீண்டும் பூமியை பசுமையாக்குவது, காங்கிரீட் காடுகளாக மாற்றுவதை நிறுத்துவது, இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் பசுமைக் காடு வளர்ப்பு திட்டம்.

பசுமைக் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், வனத்துறை சுமார் மூன்றரை லட்சம் மரக்கன்றுகளை வளர்த்து வைத்துள்ளது, ஆனால் இன்று வரை அம்மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

“காஞ்சிபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்தில் பசுமைக் காடு வளர்ப்பு திட்டத்திற்காக வனத்துறை வளர்த்து வைத்துள்ள சுமார் மூன்றரை லட்சம் மரக்கன்றுகளை இன்று வரை மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், மேலும் வேளாண் துறையினரின் அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்றும் கூறிப்பிட்டார்.

வனத்துறையினர் வளர்க்கும் மரக்கன்றுகளை வேளாண்துறையினர் தான் பெற்று, மக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், அந்தப் பணியை வேளாண்துறையினர் சரிவர செய்யவில்லை என்பதால்,  மரக்கன்றுகளைத் தனியார் கூலித் தொழிலாளிகளை வைத்துப் பராமரிப்பது சிரமமாக இருப்பதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

வனத்துறை வளர்த்து தன்னிடம் வைத்துள்ள வேங்கை, பூவரசன், மகாகனி  போன்ற மரக்கன்றுகள் விரைவாக வளர்ந்து நிழல் தரக் கூடியவை ஆகும். மேலும் இவை அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை கொண்டவை. மரங்களை நட்டு வளர்க்க மக்கள் தயாராக இருக்கும் நிலையில், அவற்றை மக்களிடம் வழங்க வேளாண் துறை தாமதிப்பது ஏன் என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்ததாகும். பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் இதற்கு மிகவும் ஏற்றது. மேலும் தாழ்வான பகுதிகள் என்றால், டிசம்பர், ஜனவரி சிறந்த மாதங்களாகும்.

இந்நிலையில் வனத்துறை வளர்த்து வைத்துள்ள மரக்கன்றுகளை விரைவில் வேளாண் துறை பெற்று மக்களுக்கு வழங்க வேண்டும். வேளாண் துறை முன்வராத நிலையில், வனத்துறை கேட்டுக்கொண்டால் அம்மரக்கன்றுகளைப் மக்களுக்கு வழங்க காஞ்சிபுரம் மாவட்ட பாமகவும், பசுமைத் தாயகம் அமைப்பும் தயாராக உள்ளன என்பதை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க:

நேற்று இன்று நாளை! மல்லி பூவின் விலை?

PM-Kisan நிதியை மத்திய அரசு உயர்த்தாது! மக்கள் ஏமாற்றம்!

English Summary: Green afforestation project; Ramadas tweets about the loss of three and a half lakh saplings. Published on: 09 December 2021, 02:15 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.