வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்! மத்திய அரசு அறிவிப்பு, வேளாண் நிலங்களுக்கு எப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்பதைக் கண்டறியும் புதிய செயலி அறிமுகம், பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு, முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 லட்சம் கடன் பெறலாம், தமிழக உழவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரைடாடினார் முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: சம்பா நெல் சாகுபடிக்கு மானியம்|குறைந்த வட்டி கடன்|கிசான் கிரெடிட் கார்டு|ரயில்வேயில் வேலைவாய்ப்பு
1. வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்! மத்திய அரசு அறிவிப்பு!!
விவசாயத்தினை ஊக்குவிக்க வேளாண் துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் புதிதாக வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்ட மத்திய பட்ஜெட்டில் கீழ்வருவன அறிவிக்கப்பட்டுள்ளன. பசுமை வேளாண் திட்டத்திற்கு என PM Pranam எனும் புதிய திட்டம் கொண்டு வரப்படும். மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட ஊழியர்கள் பிரணாம் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படுவர். அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரம் பயோ இன்புட் ரிசோர்ஸ் மையங்க்கள் அமைக்கப்படும். இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 3 ஆண்டுகளில் நாட்டில் 47 லட்சம் இளையோர் மேம்பாடு அடையும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சி.என்.ஜி உள்ளிட்ட பசுமை எரிசக்தி மேபாட்டு திட்டங்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்க்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு முதலான வேளாண் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: இறால் வளர்ப்பு 60% மானியம்|35% மானியக் கடன்|15000 ஏக்கர் நெற்பயிர்கள்|வங்கி மேளா|ஆவின்|தங்கம் விலை
2. வேளாண் நிலங்களுக்கு எப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்பதைக் கண்டறியும் புதிய செயலி அறிமுகம்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த சுதர்சன் தலைமையில் 4 நாடு களைச் சேர்ந்த 6 மாணவர்களைக் கொண்ட குழுவினர், விவசாயிகளுக்குப் பயன் அளிக்கக் கூடிய செல்ஃபோன் செயலி ஒன்றை உருவாக்கி, சர்வதேச அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார்கள். விவசாயிகள், தங்களுடைய பயிர்களுக்குச் சிக்கனமாகத் தண்ணீர் பாய்ச்ச இந்தச் செயலி துல்லியமாக வழிகாட்டுகிறது. ஐ.நா சபையில் உறுப்பு அமைப்பான யுனெஸ்கோ, புதிய மென்பொருள் கண்டு பிடிப்புக்கான சர்வதேச போட்டியை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடத்தியது. இப்போட்டியில் 21 நாடுகளைச் சேர்ந்த 600 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் கோவை பொறியியல் கல்லூரி மாணவர் சுதர்சன் தலைமையிலான குழு உருவாக்கிய, விவசாய நிலங்களின் ஈரப்பதத்தை மிக எளிமையாக, அதேசமயம் துல்லியத்தன்மையுடன் கண்டு பிடிக்கும் செயலி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
3. பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், தக்காளி, மரவள்ளி ஆகிய பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலைப்பயிர்களான சின்ன வெங்காயம், மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடு செய்திடும் வகையில் விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும் நிலையான வருமானம் கிடைக்க ஏதுவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிட்டா, நடப்பு பருவ அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் முதலியவற்றை கொண்டு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பிரீமியத் தொகையைசெலுத்தி பயிர் காப்பீட்டினை வரும் பிப்ரவரி 28-க்குள் செய்து பயன்பெறலாம்.
மேலும் படிக்க: 100% மானியம்|நெற்பயிர் வரம்பு|சேவல் வடிவ காய்|விவசாயி பெண்ணுக்கு விருது|பேருந்து ஆப்
4. முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 லட்சம் கடன் பெறலாம்!
முத்ரா கடன் திட்டத்தில் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இந்த கடன் திட்டம் வழங்கப்படுகிறது. சிறு தொழில் செய்ய விரும்புவோருக்கு ரூ.50,000-மும், கிஷோர் முத்ரா திட்டத்தில் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையிலும், தருண் முத்ரா திட்டத்தில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும் கடன் பெறலாம் எனக் கூறப்படுகிறது. அதோடு இந்த கடங்களுக்கு குறைந்த பட்சம் 12% வட்டி விதிக்கப்படுகிறது.
5. தமிழக உழவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரைடாடினார்
வேலூர் மாவட்டத்திற்குச் சென்ற தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு உள்ள உழவர்களுடன் கலந்துரையாடினார். அதோடு, மகளிர் சுய உதவிக் குழுவினர், வணிகர்கள், சிறு தொழில் நிறுவன அதிபர்கள் என வேலூர் மாவட்டத்த்ஹின் பல்தரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். அவர்கள் வைத்த கோரிக்கைகளைக் கேட்டு அறிந்தார். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.
6. சர்வதேச அளவில் வள்ளலார் மையம் அமைக்க திட்டம்!
திருஅருட் பிரகாச வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பாகத் திட்ட வரைவு சமர்ப்பித்தல் நேற்று சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். இவருதன் அமைச்சர் சேகர் பாபு, செயலாளர்கள், ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
7. விவசாய உள்கட்டமைப்பு நிதி பற்றி ஒரு நாள் Workshop
ஜி-20ல் இந்தியாவின் தலைமையின் கீழ் மத்தியப் பிரதேச ஃபார்ம் கேட் ஆப் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதி (AIF) ஆகியவற்றின் கீழ் போபாலில் உள்ள நோரோன்ஹா அட்மினிஸ்ட்ரேட்டிவ் அகாடமியில் பிப்ரவரி 2, 2023 அன்று ஒரு நாள் Workshop (Side Event) ஏற்பாடு செய்துள்ளது.
8. சிறு விவசாயிகளுக்கு நன்மைகள், தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தை மேம்படுத்துதல் குறித்து மத்திய வேளாண் அமைச்சர் தோமர் கூறியது
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக பல முக்கிய ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் ஏழை, நடுத்தர மக்கள், பெண்கள், இளைஞர்கள் மட்டுமின்றி விவசாயிகள் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விரிவான வளர்ச்சியை பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டால் சிறு விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, விவசாயத்தை தொழில்நுட்பத்துடன் இணைத்து விவசாயத் துறையின் நவீனமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக பட்ஜெட் வலியுறுத்துகிறது, இதனால் விவசாயிகள் நீண்ட காலத்திற்கு விரிவான பலன்களைப் பெறுவார்கள்.
9. STIHL இந்தியாவின் வருடாந்திர டீலர் மாநாடு!
STIHL இந்தியா தனது வருடாந்திர டீலர் மாநாட்டை ஜனவரி 22-23 2023 அன்று NCR பகுதியில் நடத்தியது. பிராண்ட் அம்பாஸ்டர் திரு. சோனு சூட் அவர்களால் தொடங்க்கப்பட்ட இரண்டு நாள் நிகழ்வில், இந்தியா முழுவதும் உள்ள 200 டீலர்கள் கலந்துகொண்டனர். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உபகரணங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய புதிய தயாரிப்புகள் தொடங்கப்பட்டன.
மேலும் படிக்க
நெல் சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து 5 லட்சம் வென்ற பெண் விவசாயி