MFOI 2024 Road Show
  1. விவசாய தகவல்கள்

Delta விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில்| TNAU வேளாண் ஏற்றுமதிக்கு பயிற்சி| Tnau Spot Admission| காந்தியும் உலக அமைதியும்

Deiva Bindhiya
Deiva Bindhiya

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற செய்திதாளில் வந்த விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான அறிக்கையில், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நேற்று முன் தினம் 29.01.2023 பரவலாக மழை பெய்துள்ளது.

நேற்று 30 ஜனவரி 2023 முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைவதால், மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை என நீர்வளத் துறை சார்பாக முதன்மை தலைமை பொறியாளர் அறிவித்துள்ளார்.

2.TNAU: வேளாண் ஏற்றுமதி தொழில்முனைவோர் என்ற தலைப்பில் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் இயக்ககத்தில் விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் மற்றும் தொழில்முனைவோரின் நலனுக்காக, இப்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இப்பயிற்சியின் முக்கிய நோக்கம், வேளாண் ஏற்றமதி மற்றும் இறக்குமதி பற்றிய அடிப்படை கருத்துகளை கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இதர பங்குதாரர்களுக்கு எடுத்துரைத்தல் ஆகும். மேலும் வேளாண் ஏற்றுமதி தொடர்பான நிபுணத்துவம் பெற்ற தொழில் துறை நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.11,800 செலுத்த வேண்டும். பயிற்சி பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெறும்.

3.5000 விவசாயிகளுக்கு ரூ.10000/- மானிய உதவியில் மின்சார மோட்டார் பம்ப்-செட்டுகள்

5000 விவசாயிகளுக்கு ரூ.10000/- மானிய உதவி வழங்க ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் "மானியத்துடன் மின்சார மோட்டார் பம்ப்-செட்டுகள்" திட்டம் செயல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மோட்டார் பம்ப்செட்களை வாங்குவதற்கு அல்லது பழைய திறனற்ற மின்சார மோட்டார் பம்ப்செட்களை மாற்றுவதற்கு - ஆணைகள் வெளியிடப்பட்டது. இதனை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை - அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் அவர்கள் செய்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

4.பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கும் உழவர் இலவச பயிற்சி

பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டி பிப்ரவரி 2023 மாத இலவச பயிற்சி நடைபெறுகிறது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் சிப்பி காளான் நேர்காணல் பயிற்சி நடைபெறவுள்ளது. முன் பதிவு செய்ய திரையில் தோன்றும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். உழவர்களுக்காக பிரேத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி இது என்பது குறிப்பிடதக்கது.

5.பெண் விவசாயி வசந்தா என்பவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 26.01.2023 அன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்,புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி வட்டம்,ஆலவயல் கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி க.வசந்தா என்பவருக்கு தமிழ்நாட்டில் 2021-2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்திக்கான,திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்றமைக்காக ரூ.5 லட்சத்திற்கான பரிசு ,பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கினார். அதனை தொடர்ந்து ,மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அவர்களிடம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியகரத்தில் ,வசந்தா அவர்கள் பரிசுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

6.TNAU காலி இடங்களுக்கு பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் ஸ்பாட் அட்மிஷன்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,186 இடங்களை நிரப்ப பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் ஸ்பாட் அட்மிஷன் நடத்துகிறது.
இப்பல்கலைக்கழகம் ஜனவரி 24ஆம் தேதியும் ஸ்பாட் அட்மிஷன் நடத்தியது. ஸ்பாட் அட்மிஷனின் முதல் சுற்றில் கணிசமான எண்ணிக்கையிலான இடங்கள் நிரப்பப்பட்டாலும், இன்னும் 1,186 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக TNAU அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இடங்கள் நிரப்பப்படாவிட்டால் ஒரு வாரத்தில் மற்றொரு சுற்று ஸ்பாட் அட்மிஷன் நடத்தப்படும் என்றார். விண்ணப்பதாரர்கள் ஸ்பாட் அட்மிஷனுக்கு நேரில் செல்ல வேண்டும். விண்ணப்பித்திருந்தும், கவுன்சிலிங் அல்லது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும் பங்கேற்கலாம்.

7.தென் மாநிலங்கள் முழுவதும் கழுகுகள் கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிடல்

மாநில அளவிலான கழுகு பாதுகாப்புக் குழு (SVCC) தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் ஒருங்கிணைக்கப்பட்ட கழுகுகள் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. கூடு கட்டும் காலம் நடந்து வருவதால், மார்ச் மாதத்துக்கு முன் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமை வனவிலங்கு காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்துள்ளார். புதன்கிழமை நடைபெற்ற SVCC-யின் முதல் கூட்டத்தில், திருநெல்வேலி, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மீட்பு மையங்களை செயல்படுத்துவது போன்ற பிற பாதுகாப்புத் திட்டங்கள்; முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி கழுகு பாதுகாப்பு மண்டலத்தை (VSZ) நியமித்தல்; மற்றும் எதிர்கால உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது. "இது முதல் சந்திப்பு என்பதால், பல்வேறு உறுப்பினர்களிடமிருந்து நிறைய யோசனைகள் பகிரப்பட்டன. கணக்கெடுப்பு பற்றி மட்டுமே உறுதியான முடிவு எடுக்கப்பட்டது,” என்றார் திரு.ரெட்டி.

8."காந்தியும் உலக அமைதியும்" - புகைப்படக் கண்காட்சி

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 76வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றஉம் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் "காந்தியும் உலக அமைதியும்" என்ற சிறப்புப் புகைப்படக் கண்காட்சி 30.01.2023 முதல் 05.02.2023 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காட்சியாகத்திற்கு உள்ளது, இந்த கண்காட்சியையும் திறந்து வைத்து சிறப்பித்தனர்.

9. திருவள்ளூர் மாவட்டத்தில் வங்கி மேளா

திருவள்ளூர் மாவட்டத்தில் 03.02.2023 அன்று 14 கலைஞர் திட்ட கிராமங்களில் வங்கிகள் மற்றும் வேளாண் சார்த்த அணைத்து துறைகளின் மூலம் "வங்கி மேளா"நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக வங்கித்துறையின்மூலம் 12.01.2023 அன்று 13 கிராமங்களில் வாங்கி மேளா நடத்தப்பட்டு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு வாங்கிக்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக 03.02.2023 அன்று வடமதுரை, சித்திராஜகண்டிகை, கூவம், மேலூர், கொடிவலசா, காட்டுப்பாக்கம், பட்டறைபெரும்புதூர், அம்மையார் குப்பம், ஞாயிறு, அலமேலுமங்காபுரம், வீரராகவபுரம், புட்லூர், வேப்பம்பட்டு மற்றும் வானகரம் ஆகிய 14 கிராமங்களில் பல விவசாயத்துறைகளின் பங்கேற்புடன் வங்கி மேளா நடைபெறவுள்ளது. புதிய வங்கிக்கணக்கு தொடங்கவும்,இன்சூரன்ஸ் பதியவும்,வங்கிக்கடன்,பயிர்க்கடன்,கல்விக்கடன்,கிசான் கிரெடிட் கார்டு ,சுயதொழில் கடன் மற்றும் இதர வாங்கிக்கடன்களை பெறுவதற்கு தேவையான விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பயன்பெற மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

10.வானிலை தகவல்

27 ஜனவரி 2023 அன்று காலை 5:30 மணி அளவில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8:30 மணி அளவில் தென்கிழக்கு வங்ககடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 31 ஜனவரி 2023 அன்று தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்ரவரி 1 இலங்கை கடற்பகுதிகளை சென்று அடையக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை, நாளை இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்ககடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

தென் மாநிலங்கள் முழுவதும் கழுகுகள் கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிடல்

ஆதார் அட்டை பயன்படுத்தி Transaction செய்யலாம், இனி OTP தேவையில்லை

English Summary: Response demands of Delta farmers| Training for TNAU Agricultural Export| Gandhi and World Peace Published on: 31 January 2023, 05:41 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.