Farm Info

Tuesday, 05 January 2021 11:17 AM , by: Elavarse Sivakumar

கள்ளக்குறிச்சியில் விவசாயக் கண்காட்சி வரும் 8ம் தேதி தொடங்குகிறது. இதில் விவசாயக் கடன் சார்ந்த விபரங்களை வங்கிப் பிரதிநிதிகள் நேரில் வழங்க உள்ளதால், பங்கேற்றுப் பயனடையுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் இந்த கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

3நாட்கள் கண்காட்சி (3 Days Exhibition)

கள்ளக்குறிச்சியில் உள்ள VAS திருமண மண்டபத்தில் வரும் 8,9,10 ஆகிய 3 நாட்கள் விவசாயக் கண்காட்சி நடைபெறுகிறது.

விதவிதமான அரங்குகள் (Different halls)

இதில் கண்ணைக் கவரும் அரங்குகளில், பண்ணை இயந்திரங்கள், இயற்கை இடுபொருட்கள், நீர்ப்பாசனம், வேளாண் தொழில்நுட்பங்கள், செட்டு நீர்ப்பாசனம் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

இதுதவிர ஒருங்கிணைந்த பண்ணையம், பாரம்பரிய விதைகள், நாற்றுப்பண்ணைகள் , குறித்த அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.

வேளாண்கடன் (Agri Loan)

இந்தக் கண்காட்சியின் வேளாண் கல்வி நிறுவனங்களும், வங்கிகளும், விவசாயிகளுக்குக் கடனுதவி திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கான பாடத்திட்டம் குறித்தும் செய்முறை விளக்கம் அளிக்க உள்ளன.

கருத்தரங்கம் (Seminar)

மேலும் வேளாண் குறித்த பல்வேறு தகவல்களை விவசாயிகளுக்கு விளக்கும் வகையிலான கருத்தரங்கங்களும் நடத்தப்பட உள்ளதால், விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சு-தோல்வியில் முடிவடைந்தது!

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)