1. செய்திகள்

வேளாண் கடன் வேண்டுமா? 4 வங்கிகளின் சிறந்த கடன் திட்டங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

Credit : DNA India

வாழும் வாழ்க்கைக்கு ஆதாரமே உணவு தான். நாம் உண்ணும் உணவுக்கு அடிப்படை விவசாயிகள். எனவே அனுதினமும் உணவளித்ததற்காக ஆண்டவனுக்கு நன்றி கூறும்வேளையில், தவறாமல், விவசாயிகளுக்கும் நன்றி கூற நாம் அனைவருமே கடமைப்பட்டிருக்கிறோம்.

அத்தகைய விவசாயி தன்னுடைய பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏதுவாக வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
இதில் முக்கியமான 4 வங்கிகளின் சிறந்த விவசாயக் கடன் திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.

1.அலகாபாத் வங்கி 

இந்த வங்கி இரண்டு வகை கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

1.அக்ஷய் கிரிஷி கிசான் கடன் அட்டைத் திட்டம் (Akshay Krishi – Kisan Credit Card Scheme)

இந்த திட்டத்தின் கீழ், சொந்த நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும், குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களும், நிலத்தை வாடகைக்கு எடுத்து சாகுபடி செய்பவர்களும் பயனடையலாம்.விவசாயிகள் நேரிடையாக வங்கியை அணுகி கடன் அட்டை பெறலாம். கடன் அட்டையின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். கடன் உச்சவரம்பு ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்படும். உச்சபட்சமாக 10 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

2.  உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கான பயிர்க்கடன் திட்டம்.

இந்தத் திட்டத்தின் கீழ், 20 லட்சம் வரைக் கடன் பெறலாம்.வேளாண் கருவிகளுக்கும் கடன் வழங்கப்படும். விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளும் கடன்பெறத் தகுதியுடையவர்கள்.

2.ஆந்திரா வங்கி

1.ஏபி கிசான் சம்பதி (AB Kisan Sampathi Crop Loan)

விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்காமல் நஷ்டத்தை எதிர்கொள்ளும் காலத்தில், இந்த திட்டம் கைகொடுக்கும்.அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரைக் கடன் பெறமுடியும்.

2. கிசான் கல்பட்டரு கடன் (Kisan Kalpataru Loan )

நுண்ணீர் பாசனம், நீர் சேமிப்பு, தோட்டக்கலை, உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். உச்சபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம்.

Credit : India TV

3. ஐசிஐசிஐ வங்கி

1.வேளாண் கடன் (Agri loan)

இந்தத் திட்டத்தில் வேளாண் கருவிகள், கால்நடைகளை வாங்குதல் உள்ளிட்டவற்றிற்கு விவசாயிகள் கடன் பெறலாம். அவ்வாறு வாங்கும் கடனை 3 முதல் 4 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தி விடவேண்டும். இதற்கு 13.5 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது.


2.ஐசிஐசிஐ கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card)


இதைத்தவி ஐசிஐசிஐ வங்கி கிசான் கடன் அட்டையும்(Kisan Credit Card)வழங்குகிறது. இதனைப் பெற, விவசாயிகளுக்கு சொந்தமாக நிலம் இருக்க வேண்டியது அவசியம்.

4. பஞ்சாப் நேஷ்னல் வங்கி(Punjab National Bank Agricultural Schemes)

பஞ்சாப் நேஷ்னல் வங்கி விவசாயிகளுக்காக இரண்டு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

1.கோழிப்பண்ணை அமைக்கக் கடன்

சிறுவிவசாயிகள், நிலம் மில்லாத வேளாண் தொழிலாளர்கள், அல்லது கோழிப்பண்ணை அமைத்து வருமானம் ஈட்ட நினைப்பவர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையலாம். கோழிப்பண்ணை அமைத்தல், கருவிகள் வாங்குதல், கோழிக்குஞ்சுகள் மற்றும் தீவனங்களை வாங்குதல், மருத்துகள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கப்படுகிறது. பண்ணையில் குறைந்தபட்சம் 500 பறவைகள் இருக்க வேண்டியது அவசியம்.

2. இன உற்பத்திக்கு கடனுதவி

இதைத்தவிர ஆடுகள் இனப்பெருக்கப் பணிகளுக்கும் இந்த வங்கி கடனுதவி வழங்குகிறது.
மேலும் கொட்டகை அமைத்தல் பால் உற்பத்தி, இறைச்சிக்காக ஆடுகளை வளர்த்தல் உள்ளிட்டவற்றுக்கும் கடன் வழங்கப்படுகிறது. அவ்வாறு வாங்கும் கடனை 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க...

கூடுதல் மகசூலுக்கு பறவைகளும் முக்கியமே !

பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!

அழகுக்கு அரிசித் தண்ணீர்! நம்ப முடிகிறதா?

English Summary: Need an agricultural loan? 4 Banks' Best Loan Schemes!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.