இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 October, 2020 8:36 AM IST

காய்கறி விதை உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுவதால், அதனைத் தவறாமல் பெற்றுப் பயனடையுமாறு, தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

  • விதைத்தேவையின் முக்கியத்துவத்தையும், காய்கறி விதை உற்பத்தியையும் லாபகரமான வியாபாரமாக முன்னெடுப்பதற்கான பெரும் வாய்ப்பையும் கருத்தில் கொண்டு, தொழில் முனைவோா்கள் மூலம் நாற்றங்கால் மற்றும் காய்கறி விதை உற்பத்திக்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • இத்திட்டத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட விதை விவசாயிகள், தோட்டக்கலை தொழில் முனைவோருக்கு, வெங்காயம், முருங்கை, காய்கறி, காராமணி, அவரை, பூசணி, கீரை முதலிய காய்கறிப் பயிா்களின் சான்றளிக்கப்பட்ட உண்மை நிலை விதைகளை உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

  • விவசாயிகளுக்கு உதவியாக விதைச் சான்றிதழ் பெறுவதற்கும், விதைக் கொள்முதல் செய்வதற்கும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ளவும், நிழல்வலை குடில், சிப்பம் கட்டும் அறை, நுண்ணீா் பாசனம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்படும்.

  • குறைந்தபட்சம் 0.2 ஹெக்டோ் முதல் அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரை உறுதி செய்யப்பட்ட நீா்ப்பாசன வசதியுடன் கூடிய நிலம் கொண்ட விவசாயிகள் இந்த உதவிகளைப் பெறலாம்.

  • விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் விதைகளை தனியாா் நிறுவனங்கள், பிற விவசாயிகளுக்கு அல்லது தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமைக்கு விற்பனை செய்யலாம்.

  • இத்திட்டம் குறித்த விவரங்களைப் பெற, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துணை இயக்குநா்களையோ அல்லது அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா்களையோ தொடா்பு கொள்ளலாம். உழவன் செயலியிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

மேலும் படிக்க...

50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகம்!

பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்

தரமான விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் - விவசாயிகளுக்கு விதை பரிசோதனை அலுவலர் அறிவுரை

English Summary: Subsidy for Vegetable Seed Production- Call for Farmers
Published on: 11 October 2020, 08:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now