மீன்வளத்தை பெருக்கும் வகையில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மானியம் அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
மாவட்ட நிர்வாகம் அழைப்பு (District Administration)
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் மீன்வளத்திட்டத்தின் கீழ் மீன்வளத்துறையின் மூலம் மீன்வளத்தை பெருக்க 2020-2021-ம் ஆண்டு முதல் 2024-2025-ம் ஆண்டு வரை 5 நிதி ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானிய உதவியும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானிய உதவியும் வழங்கப்படுகிறது.
இந்த மானிய உதவி புதிய மீன் மற்றும் இறால் பண்ணைக்குட்டை அமைத்தல், உயிர்கூழ் முறையில் மீன்வளர்ப்பு செய்தல், வண்ணமீன் வளர்ப்பு திட்டம், மீன்விற்பனை செய்பவர்களுக்கு இரு சக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டி வழங்குதல், கடற்பாசி வளர்த்தல், கூண்டுகளில் மீன்வளர்த்தல், ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கான படகுகள், ஒருங்கிணைந்த கடல் வண்ண மீன்வளர்த்தல், மற்றும் கடல் வண்ணமீன் சேகரித்தல் ஆகியவைகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2320458 மற்றும் 9384824352 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் (Perambalur district)
-
இதேபோல், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :
-
மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் ஏற்கெனவே உறுப்பினராகப் பதிவுசெய்து, மீன் வளர்ப்பவா்களுக்கு தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
-
இந்த மானியத்தினை பெற விரும்புவோர் கடந்த 3 ஆண்டுகளில், அரசிடமிருந்து எந்தவொரு உள்ளீட்டு மானியமும் பெற்றிருக்கக் கூடாது.
-
நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் பதிவு ரசீதுடன், மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
-
மேலும் விவரங்களுக்கு 04329- 228699 என்ற எண்ணிலும், 63813 44399, 97159 23451 ஆகிய செல்போன்களிலும், தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.
-
மேலும் படிக்க...
மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!
சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!