Farm Info

Friday, 28 August 2020 07:42 AM , by: Elavarse Sivakumar

Credit: Agri.wa

விவசாயத்தை வேரறுப்பதற்காக, முளைக்கும் விஷச்செடியானப் பார்த்தீனியம் செடிகளைக் கொண்டு பலவித உரங்களைத் தயாரித்து சாகுபடிக்கு பயன்படுத்தலாம்.

பார்த்தீனியம் (parthenium)

கிராமம், நகரம் என எங்கும் வியாபித்துள்ளது பார்த்தீனிய செடிகள். இவை மற்ற தாவரங்களைப் போல் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமல்லாமல், ஆண்டின் எல்லா மாதமும் செழித்து வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்துடன் இருக்கும். எந்த மண்ணிலும் எந்தச் சூழலிலும் முளைக்கும் திறன் படைத்தப் பார்த்தீனியம் செடிகளை அழித்து ஒழிப்பது என்பது சற்று சவால் மிகுந்ததே.

சுகாதாரக்கேடு (Health Issues)

பார்த்தீனியத்தில் உள்ள "செஸ்கிடெர்பின் லேக்டோன்' (Chesgiterpine Lactone) என்ற வேதிப் பொருளால் மனிதர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, அரிப்பு, தோல் வியாதி, கண் வீக்கம், ஆஸ்துமா போன்ற உபாதைகள் ஏற்படும்.இந்த களைச் செடிகளை பிடுங்கி அழிப்பதை விட அதனை அப்படியே  உரமாக மாற்றலாம்.

இயற்கை உரம் தயாரிப்பு (Natural Fertilizers)

முதலில் 6 அடிக்கு 4 அடி அளவுள்ள குழி தோண்டி, அதில் வேருடன் பிடுங்கிய பார்த்தீனியச் செடிகளை போட வேண்டும். அத்துடன் கொழுஞ்சி, எருக்கன் இலை, வேப்பிலை மற்றும் கிடைக்கும் இலை தழைகளையும் கலந்து போட்டு இரண்டடி உயரத்திற்கு நிரப்பி, நன்கு மிதித்து அதன் மேல் சாணி மற்றும் கோமியக் கரைசல் தெளிக்க வேண்டும். அதன் மேல் மூன்று அங்குல அளவிற்கு மண் போட்டு, மீண்டும் இதே மாதிரி மூன்று நான்கு அடுக்குகள் போட்டு, மேலே மண் போட்டு மீண்டும் மூடி வைத்தால் ஓரிரு மாதங்களில் அற்புதமான இயற்கை உரம் தயாராகிவிடும்.

Credit : TradeIndia

இதில் மற்ற உரங்களில் கிடைப்பதை விட நைட்ரஜன் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. பயிர்களுக்கு வேண்டிய நுண்ணூட்டச் சத்துக்களும் அதிக அளவில் இருப்பதால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கும்.

அடி உரம் (Feet compost)

தென்னை, மா, எலுமிச்சை மரங்களுக்கு இடையில் 2அடிக்கு 2 அடி 2 அடி குழி வெட்டி அதில் பார்த்தீனியம் மற்றும் சாணிக் கரைசல் போட்டு மூடி வைத்து விட்டால், ஒரு மாதத்தில் அவை மக்கி விடும். மரத்தின் வேர்கள் அந்த உயிர்ச் சத்தை கிரகத்துக் கொண்டு நன்கு செழித்து வளர்வதுடன் அதன் காய்ப்புத் திறன் அதிகரிக்கும்.

மண்புழு உரம் தயாரித்தல்  (Earthworm compost)

பூக்கும் முன்னர் பார்த்தீனியம் களைகளைச் சேகரித்து, அவற்றை 5-10 செமீ அளவில் நீளவாட்டில் நறுக்கி 10 செமீ சுற்றளவில் 10 செமீ உயரத்துக்கு கீழிருந்து 5 அடுக்குகளாக அடுக்கி, அதன் மேல் 10 சதவீதம் மாட்டுச் சாணத்தைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாள்கள் மக்குவதற்கு விட வேண்டும். 45 முதல் 60 நாள்களில் மண்புழு உரம் கிடைக்கும்.

கம்போஸ்ட் தயாரித்தல் ( compost)

இச்செடியை பூக்கும் முன்னர் ஒரு டன் அளவுக்கு சேகரித்து 7 செமீ முதல் 10 செமீ வரை சிறு துண்டுகளாக நறுக்கி, வடிகால் வசதி, நிழல் உள்ள உயரமான இடத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கு 10 செமீ அடர்த்தியாக அடுக்குகளாக பரப்ப வேண்டும். இதன் மீது 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண மருந்து, 5 கிலோ யூரியாவைக் கரைத்து பரவலாக தெளிக்க வேண்டும். ஈரப்பதம் 50 முதல் 60 சதம்வரை இருக்குமாறு பராமரிக்க வேண்டும். இது, 40 முதல் 45 நாள்களில் கம்போஸ்டாக கிடைக்கும். இது, பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கி.

மேலும் படிக்க...

அரசின் இலவச மாட்டுக்கொட்டகைத் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!

பயன்களை அள்ளித்தரும் திரவ உயிர் உரங்கள்- விவசாயிகள் கவனத்திற்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)