Farm Info

Thursday, 05 May 2022 09:26 PM , by: Elavarse Sivakumar

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்துகொண்டு, தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, தொழில் அதிபராகும் வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனி வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்துகொண்டு, தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, தொழில் அதிபராகும் வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.

கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விவசாயிகளுக்கு புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்வது, இயற்கை விவசாயத்திற்குத் தேவையான இடுபொருட்களைத் தயாரித்து வழங்குவது உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், இளம் தலைமுறையினருக்கும், தொழில் கற்றுக் கொண்டு சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கும் பயன்படும் வகையில், தொழில்நுட்பப் பயிற்சியையும் அளித்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனி வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி 2022 ஆண்டு மே மாதத்திற்கான பயிற்சி, 06.05.2022 வெள்ளிக்கிழமை அன்று அளிக்கப்பட உள்ளது.

முக்கிய அம்சங்கள்

  • தேனீ இனங்களை கண்டு பிடித்து வளர்த்தல்

  • பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம்

  • தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம்.

  • தேனைப் பிரித்தெடுத்தல்

  • தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம்

கட்டணம் (Fees)

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதிற்கு வந்து அடையான சான்று சமர்ப்பித்து பயிற்சிக் கட்டணம் ரூ.590 (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) நேரிடையாக செலுத்த வேண்டும்.
பயிற்சி நேரம் காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

கூடுதல்  விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்  என்ற முகவரியிலும், 0422-6611214 என்றத் தொலைபேசியிலும், entomology@tnau.ac.in. என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். 

மேலும் படிக்க...

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)