செப்டம்பர் மாத இறுதிவரை, நல்லத் தரமானச் சின்ன வெங்காயத்திற்கு ரூ.34 வரை விலை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சின்னவெங்காயம் உற்பத்தி (Onion production)
இந்தியாவிலேயே தமிழ்நாடு சின்ன வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் திகழ்கிறது. குறிப்பாக திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தை அதிகளவு பயிரிடுகின்றனர்.
பயிரிடும் பருவம் (Cultivation season)
தமிழ்நாட்டில் சின்ன வெங்காயம் முக்கியமாக தை வைகாசி மற்றும் புரட்டாசி பட்டம் ஆகிய மூன்று பட்டங்களில் பயிரிடப்பட்டு சந்தையில் ஆண்டு முழுவதும் கிடைக்கும்படி சேமிக்கப்படுகிறது.
இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேரியா ஆகிய நாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து சின்ன வெங்காயம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டு சந்தை நுகர்வோர்கள், 23 மிமி அளவுடைய சின்ன வெங்காயத்தையே அதிகமாக விரும்புகின்றனர்.
வெங்காய வரத்து
திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தைகளுக்கு தாராபுரம், பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து சின்ன வெங்காயம் வரத்து உள்ளது.
விலை முன்னறிவிப்பு (Price forecast)
தற்போது, உற்பத்தியாளர்கள் விலை உயரும் என்ற நம்பிக்கையில் சேமித்தும் வைத்துள்ளனர். வர்த்தக மூலகங்களின் படி, இருப்பு நிலை மற்றும் பிற மாநில வரத்து துவங்கும் வரை (செப்டம்பர், 2021 வெங்காயத்தின் விலையானது, தற்போதைய சந்தை விலையை ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.32 முதல் ரூ.34 வரை (Rs.32 to Rs.34)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 22 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்னவெங்காயத்தின் விலை மற்றும் சின்ன வெங்காயம் பயிரிடப்படும் முக்கியப் பகுதிகளில் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
விலை மற்றும் சந்தை ஆய்வுகளின்படி நல்ல தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை செப்டம்பர் மாத இறுதி வரை கிலோவிற்கு ரூ.32 முதல் ரூ.34 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டை மாநிலங்களின் பருவமழை மற்றும் வரத்து பொறுத்து, வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு (For more details)
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர்- 641003
தொலைபேசி எண் 0422-6611374
தொழில்நுட்ப விபரங்களுக்கு (For technical details)
பேராசிரியர் மற்றும் தலைவர்
காய்கறிப் பயிர்கள் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்- 641003
தொலைபேசி எண் 0422-6611374யைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க...
தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்: கட்டுப்படுத்த ஆலோசனை!
திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் அதிகாரி விளக்கம்!