1. செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடி?முதல்வர் அறிவிப்பு!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Agricultural loan

புதுச்சேரியில் நேற்று காலை கூடிய பட்ஜெட் கூட்டத்தொடர் மாலை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 4.30 மணியளவில் புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. 2021-2022 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 2021-2022 ம் ஆண்டிற்கு ரூ. 9924.4 கோடி நிதி நிலை அறிக்கையை  தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையில் புதுச்சேரியில் போன்சாய் மர தோட்டம் அமைக்கப்படும் மற்றும் 4 ஆயிரம் கறவைப் பசுக்கள் கால்நடை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும், இலவச அரிசி வழங்க197.55 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 5 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக அறிவிக்கப்பட்டும்,மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், 51 லட்சம் ரூபாய் செலவில் புதுவை அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படு்ம் என்றும் முதல்வர் ரங்கசாமி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மாணவர்கள் இடை நிற்றலை தவிர்க்க வகையில் கல்வி கற்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு பொறுப்பேற்கும். இதற்காக கல்வித் துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார்.மேலும் அவர் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும், நவீன கணினி வயர்லெஸ் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், மீனவ மாணவர்களுக்கு 18 லட்சம் மதிப்பீட்டில் மீன் வளத்துறைக் நூலகம் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது ஒரு நாளைக்கு 1.22 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில் 1.75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளமாகவும், சுகாதாரத் துறைக்கு ரூ. 795.88 கோடி ஒதுக்கீடு, அன்ன தான திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும முதல்வர் ரங்கசாமி தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

முக்கியமாக, கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள விவசாய கடன் மற்றும் மாணவர்களின் கல்வி கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மாலை 4.30 மணிக்கு தொடங்கி, 5.45 மணிக்கு 64 பக்க நிதிநிலை அறிக்கையை, 1.15 மணி நேரம் ரங்கசாமி வாசித்தார் முடித்தார். பின்னர் சட்டபேரவையை இன்று காலை 9.30 மணிக்கு, சபாநாயகர் செல்வம் ஒத்தி வைத்திருந்தார்.

மேலும் படிக்க:

தமிழக வேளாண் பட்ஜெட் சிறப்பம்சங்கள்!

TN Budget 2021: வேளான் பட்ஜெட் மீது உள்ள எதிர்பார்ப்புகள்!

English Summary: Agricultural loan waiver? Chief Minister Stalin's announcement! Published on: 27 August 2021, 12:29 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.