1. செய்திகள்

3 மாவட்டங்களில் உழவர் சந்தைகள் புதுப்பொலிவு பெற அனுமதி!

R. Balakrishnan
R. Balakrishnan
Farmers Market

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், 87 லட்சம் ரூபாய் செலவில், உழவர் சந்தைகள் புதுப்பொலிவு பெறுவதற்கு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அனுமதி அளித்து உள்ளது. மேலும், பல வசதிகளை செய்வதற்கு முன் வந்துள்ளது என, அத்துறையினர் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும், 50 உழவர் சந்தைகளை மேம்படுத்துவதற்கு, 11.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அனுமதி அளித்து உள்ளது.

உழவர் சந்தை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், நான்கு உழவர் சந்தை கட்டடங்கள், 87 லட்சம் ரூபாய் மதிப்பில், பல வித வளர்ச்சி பணிகள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, அம்பத்துார் ஆகிய உழவர் சந்தை கட்டடங்களில், குடிநீர், கழிப்பறைகள், கடைகள் புனரமைத்தல், தரை தளத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பல வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த வசதிகள் மேம்படுத்தினால், தனியார் காய்கறி கடைகளுக்கு இணையாக புதுப்பொலிவு பெறும் என, வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள், நுகர்வோருக்கு இடையே இடைத்தரகர்கள் இருப்பதால் அவர்கள் அதிக லாபம்சம்பாதிக்கின்றனர். அதனால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைவான விலை கிடைக்கிறது. இந்த சுரண்டலைத் தடுப்பதற்காகவே உழவர் சந்தை தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும், நுகர்வோருக்கு தரமான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் உரிய விலைகிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேளாண் மற்றும் உழவர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் உழவர் சந்தைகளில் சில வசதிகள் குறைவாக இருக்கிறது. அதை மேம்படுத்தும் வகையில், புதிய திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 87 லட்ச ரூபாய் செலவில், உழவர் சந்தை புது பொலிவு பெற பல வித வசதிகளை மேம்படுத்த உள்ளோம். மேலும், குளிர்சாதனம் வசதியுடன் கூடிய குளிரூட்டும் மையம் கட்டப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் அதிகாரி விளக்கம்!

இயற்கை விவசாயிகள் தரச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்!

English Summary: Farmers' markets allowed in 3 districts Published on: 27 August 2021, 08:08 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.