Central

Thursday, 29 July 2021 05:09 AM , by: R. Balakrishnan

Credit : ORF

வீட்டின் கூரைகளில் சூரிய சக்தி மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு வழங்கப்படும் மானியம் (Subsidy) குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

சூரிய சக்தித் திட்டம்

ஊரகப் பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் கூரைகள் மீது சூரிய சக்தியை நிறுவும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக, கூரைகள் மீது நிறுவப்படும் சூரிய சக்தித் திட்டத்தை (பகுதி II) மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அமல்படுத்துகிறது.

இதற்காக, 2022-ம் ஆண்டிற்குள் 4000 மெகாவாட் திறன் (MW) கொண்ட கூரைகள் மீதான சூரிய சக்தி மின்வசதியை குடியிருப்பு துறையில் மானியத்துடன் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை, மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே. சிங், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மானியம்

தனி வீடுகளின் கூரைகளில் 3 கிலோ வாட் வரை சூரிய சக்தியை நிறுவுவதற்கு 40% வரை மானியம் வழங்கப்படும். 3 முதல் 10 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி கருவிகளை நிறுவுவதற்கு 20% மானியம் அளிக்கப்படும்.

குடியிருப்பு நல்வாழ்வு சங்கங்கள்/ குழு வீடுகளின் சங்கங்களுக்கு பொதுவான மின்சார வசதிகளுக்கு பயன்படுத்துவதற்காக நிறுவப்படும் 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி உபகரணங்களுக்கு 20% மானியம் வழங்கப்படும்.

தொகுப்பில் இணைக்கப்பட்ட கூரைகள் மீதான சூரிய சக்தி அமைப்புமுறைகளின் ஒட்டுமொத்த ஊக்குவிப்பிற்காக இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

ஜூலை 26- கார்கில் வெற்றி தினம்: ஜனாதிபதி மரியாதை!

ஆதார் கார்டில் மொபைல் எண் திருத்தம்: இனி வீட்டிலேயே எளிதாக செய்யலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)