பிரதமரின் கிசான் திட்டத்தில் இது வரை விண்ணப்பிக்காத விவசாயிகள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு ரூ.4000 கிடைக்கும், இந்த சலுகையை எப்படிப் பெறுவது என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணைகளில் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இது வரை 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
அண்மையில், இந்த திட்டத்தின் எட்டாவது தவணையைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதன் கீழ் ரூ. 9.5 கோடி விவசாயிகளின் கணக்கில் 20 ஆயிரம் கோடி அனுப்பப்பட்டது.
பி.எம் கிசான் திட்டத்தில் இணைவது எப்படி?
நீங்கள் ஒரு விவசாயியாக இருப்பின், பி.எம் கிசான் திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள் அனைத்தும் உங்களிடம் இருப்பின் நீங்கள் வீட்டிலிருந்தே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் புதிய விவசாயிகள் தங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம் - https://pmkisan.gov.in/
நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
ஜூன் 30க்குள் விண்ணப்பித்தால் இரட்டை நன்மை
இது வரை விண்ணப்பிக்காத விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் ஜூன் 30க்கு முன் பதிவு செய்தால், அவர்களுக்கு இரண்டு தவணைகளுக்கான கிசான் நிதியைப் பெற முடியும்.
நீங்கள் ஜூன் மாதத்தில் பதிவு செய்தால், உங்களுக்கான முதல் தவணையை ஜூலை மாதத்தில் பெறலாம். அதாவது தற்போது விடுவிக்கப்பட்ட 8வது தவணையின் நிதியை நீங்கள் ஜூலை மாதத்தில் பெறுவீர்கள். தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு வழக்கமாக வழங்கும் தவணையும் நீங்கள் பெற முடியும். இதன் மூலம் விவசாயிகள் பிரதமர் கிசான் யோஜனாவின் இரட்டை நன்மையைப் பெறமுடியும். இதன் மூலம் விவசாயிகள் இரண்டு தவணைகளுக்கான தொகையான ரூ.4000 பெறமுடியும்.
PM கிசான் நிலையைச் சரிபார்க்க கிளிக் செய்க
பி.எம் கிசான் திட்டத்திற்கான தகுதிகள்
பி.எம் கிசான் திட்டம் அறிமுகப்படுத்திய நேரத்தில், சிறிய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் நன்மை வழங்கப்பட்டது. பின்னர் இந்தத் திட்டம் திருத்தப்பட்டது, அதன் பின்னர் நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு உதவ விவசாயிகள் உதவி மையம் - வேளாண் துறை!!
காய்கறிகளை விற்பனை செய்ய மானிய விலையில் விவசாயிகளுக்கு தள்ளுவண்டி - வேளாண் துறை!
வேளாண் விளைப்பொருட்களை விற்பனை செய்ய பிரச்சனை இருந்தால் தோட்டக்கலைத்துறையை அணுகலாம்!!