இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 January, 2022 2:27 PM IST
Atal Pension Yojana: A special scheme for married couples

அடல் பென்ஷன் யோஜனா : ஓய்வூதியத் திட்டமிடல் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது, ஏனெனில் எல்லோரும் தங்கள் எதிர்காலத்தை நிதி ரீதியாக உத்தரவாதப்படுத்துவதில், அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தனிநபர்கள் பலவிதமான திட்டங்கள் மூலம் பயனடையலாம். அவ்வாறு இருக்க விரும்பினால், தம்பதிகளாகவும் எதிர்காலத்தில் நிதி ரீதியான பிரச்சனைகளை தவிர்க்க வழி உண்டு.

அடல் பென்ஷன் யோஜனா (APY) என்பது தம்பதிகள் தேர்வுசெய்யக்கூடிய திட்டங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது நல்ல வருமானம் மற்றும் முதலீட்டு பாதுகாப்பை வழங்குகிறது. இரண்டு தனித்தனி கணக்குகளை பதிவு செய்வதன் மூலம், கணவனும் மனைவியும் ஒரு மாத ஓய்வூதியமாக கிட்டத்தட்ட 10,000 ரூபாய் பெற்றிடலாம்.

வரி செலுத்தும் தம்பதியினர் தங்கள் அமைப்பில் உள்ள டெபாசிட்டுகளுக்கு எதிராக வரிச் சலுகைகளைப் பெறலாம், இது திட்டத்தின் பலனாகும்.

அடல் பென்ஷன் யோஜனாவுக்கான தகுதி அளவுகோல்கள்(Eligibility Criteria for Atal Pension Scheme)

அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது .

18 முதல் 40 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமகனும், இப்போது அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்யலாம்.

ஒரு நபருக்கு வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு இருந்தால் மட்டும் போதும், அவர்கள் அடல் பென்ஷன் யோஜனா முதலீட்டுத் தேர்வாக உடனடியாகத் தேர்ந்தெடுக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய, ஆதார் அட்டை எண்ணும் செல்போன் எண்ணும் தேவைப்படும்.

முதலீட்டாளர்கள் 60 வயதை அடைந்தவுடன் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் அவர்.

அடல் பென்ஷன் யோஜனாவின் நன்மைகள் என்ன? (What are the benefits of Atal Pension Yojana?)

ஒரு நபர் மாதந்தோறும், ரூ.1,000 அல்லது ரூ.2,000, ரூ.3,000 அல்லது ரூ.4,000 அல்லது அதிகபட்சமாக ரூ. 5,000, அவரது வைப்புத்தொகையைப் பொறுத்து பெறுவார்.

18 வயதில் தொடங்கி, ஓய்வூதியம் பெறுபவர் ரூ. 5,000 மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.210 முதலீடு செய்ய வேண்டும்.

மாதம் 10000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி? (How to get a pension of 10000 rupees per month?)

30 வயதிற்குட்பட்ட தம்பதிகள் இரண்டு தனித்தனி அடல் பென்ஷன் யோஜனா கணக்குகளைத் திறப்பதன் மூலம் இதைச் செய்யலாம்.

60 வயதிற்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெற, அவர்கள் தலா 577 ரூபாய் அந்தந்தக் கணக்குகளில் டெபாசிட் செய்ய வேண்டியது அவசியம்.

திட்டத்தில் வரி நன்மைகள் என்ன?

அடல் பென்ஷன் யோஜனாவில் செய்யப்படும் முதலீடுகள் முதலீட்டாளர்களுக்கு வரியைச் சேமிக்க உதவும் என்பது குறிப்பிடதக்கது.

முதலீட்டாளர்கள் இப்போது வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளைப் பெறலாம்.

மேலும் படிக்க :

ஏர்டெல்லில் முதலீடு செய்யும் கூகுள்: நிறுவனங்களின் இலக்கு என்ன?

வாகனம் வைத்திருப்பவர்களே கவனம் PUC சான்றிதழ் இல்லாமல் பெட்ரோல் கிடைக்காதாம்!

English Summary: Atal Pension Yojana: A special scheme for married couples
Published on: 29 January 2022, 02:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now