மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 December, 2020 12:24 PM IST

விறகு எடுத்துவந்து சமைத்த காலமெல்லாம் மலையேறி விட்டது. ஏனெனில்,எரிவாயு என்பது அன்றாட சமையலுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிலிண்டர் விலை உயர்வு, நடுத்தரவாசிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இதில் மத்திய அரசின் மானியமும், தகுதியுள்ளவர்கள் அனைவரையும் அடைவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், சிலிண்டருக்கு மாற்றாக சிக்கனமான செலவில் எதாவது எரிவாயு கிடைக்குமா என எண்ணுபவரா நீங்கள்? அப்படியானால் மத்திய அரசின் இந்த மகத்தானத் திட்டம் உங்களுக்குதான்!

தகுதி (Qualification)

இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய வேண்டுமானால், நீங்கள் மாடு வளர்ப்பவராக இருக்க வேண்டும். அல்லது மாட்டுச்சாணத்தை  (Cow Dung) விலைக்கு பெறுபவராக இருக்க வேண்டும்.

மாடுகளைப் பொருத்தவரை, ஒரு மாடு தினமும் 20 கிலோ வரை சாணம் போடும். பண்ணையில் வளர்க்கப்படும் மாடாக இருந்தால், அந்த 20 கிலோ சாணமும், பண்ணையாருக்கே சொந்தம். அதேநேரத்தில் மேய்ச்சலுக்கு விடப்படுவதாக இருந்தால், பண்ணைக்கு 10 கிலோ சாணமே  கிடைக்கும். 

அப்படிக் கிடைக்கும் மாட்டுச்சாணத்தைக் கொண்டு, Biogas தயாரிப்பது மிக மிக சுலபம்.
இந்தத் திட்டத்தில் சேர நீங்கள் விரும்பினால், கதர் ஆணையத்தை அணுகுங்கள். அவர்களே உங்கள் இல்லத்தில் Biogas - Plantயை அமைக்க வழிகாட்டுவார்கள்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாடுகள் வைத்திருக்கும் கிராமப்புற மக்கள் தாங்கள்,
சமைக்கத் தேவையான எரிவாயுவை தாங்களே தயாரித்துக் கொள்ள முடியும். அவ்வாறு மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி எரிவாயுவைத் தயாரிக்கும் சாண எரிவாயுக் கலனை உங்கள் வீடுகளில் ஏற்படுத்திட அழைக்கிறது காதி ஆணையம். இதன் மூலம் தடையில்லா எரிவாயுவைப் பெற்றிட முடியும்.

3 விதத்தில் நன்மைகள் (3 Types of Benefits)

இதில், எரிவாயு சிலிண்டரில் உள்ள அனைத்து சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே ஒரே சாண எரிவாயுக் கலனை அமைத்து, மூன்று விதமான நன்மைகளைப் பெறலாம்.

1. சமையலுக்கு தேவையான கேஸ்
2. விளக்கு எரிக்க கேஸ்
3. சத்தான சாண எரிவாயு உரம்.

பயனடையும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 4முதல் 5ஆக இருந்தால், 2 முதல் 3 கால்நடைகள் தேவைப்படும். ஆகும் செலவில் பயனாளிகள் பங்கு 16,000 ரூபாய். இதேபோல், 6 முதல் 8 உறுப்பினர்கள் என்றால், 3 முதல் 4 கால்நடைகள் தேவைப்படும். ஆகும் செலவில் பயனாளிகள் பங்கு ரூ.26,000. ஆக உறுப்பினர்களுக்கு ஏற்ப கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதற்கு அரசு வழங்கும் மானியம் ரூ.12,000 ஆகும்.

கூடுதல் சேமிப்பு (Extra Saving)

நம்முடைய இல்லத்தில், மாதத்திற்கு ஒரு சிலிண்டர் பயன்படுத்தினால், அதற்காக 850 ரூபாய் செலவிட நேரும். ஆண்டிற்கு ரூ.11400 ரூபாய். (நேரடி மானியம் இல்லாமல்)
அதேவேளையில் மண்ணெண்ணெய் பயன்படுத்தினால், ஆண்டிற்கு ரூ.12000 வரை செலவாகும்.

இந்தச் செலவைத் தவிர்க்க உங்கள் வீடுகளில் Biogas Plantயை நிறுவிட ஒரே ஒரு முறை மட்டும் செலவு செய்தால் போதும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.12,000த்தை சேமிப்பாக மாற்றுவதால், அது உங்களுக்கு வருட வருமானமாகவும் மாறுகிறது. மேலும் கழிவாக வெளியேறும் சாணக்கரைகலையும், உரமாக மாற்றி விற்பனை செய்தால், இரட்டிற்கு வருமானமும் கிடைக்கிறது.

இதுகுறித்து இயற்கை விவசாயி கலிவரதன் கூறுகையில்,Bio-gas Plantன் மேல் Drum ஒன்றை இணைப்பார்கள், Plantன் உள்ளே சாணிக்கரைசல் குறைவதை இந்த Drum அசைவதை வைத்துத் தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் வெளியூர் செல்ல நேரும் பட்சத்தில், Bio-gas Plant யை Off செய்துவிட்டு செல்வீர்கள். அப்போது இந்த Plantல் உருவாகும் மீத்தேன் வாயு, தானாகவே தண்ணீராக மாறிவிடும். அது வெளியேறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள வசதியை திறந்து வைத்துவிட்டால் போதும். தண்ணீர் வெளியேறிவிடும். நீங்கள் எவ்வித பயமும் இன்றி, Bio-gas Plant யைப் பயன்படுத்தி எரிவாயுவை தயாரித்து உபயோகப்படுத்தலாம் என்றார்.

சாண எரிவாயு எனப்படும் எரிவாயுக் கலனை அமைக்க நீங்க விரும்பினால், KVIC அலுவலகத்தால் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்ட Biogas Technician உங்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து, Biogas Plantயை அமைத்துக் கொடுப்பார். இதற்கு பின்னேற்வு மானியமாக ரூ.12 ஆயிரம் பெற்றுத்தரப்படும்.

இந்த Technicianகள் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் கிராமப்புறங்களில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC)கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் மற்றும் மாவட்ட தொழில் மையம் (DIC)மூலம் Bio-gas Plant அமைப்பது குறித்து பயிற்சி பெற்றிருப்பார்கள்.

அவ்வாறு பயிற்சி பெற்ற Biogas Technicianகளுக்கு மாவட்டத்திற்கு 60 Plant களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாணக்கரைசலின் மூலம் கலனில் இருநது வெளியேறும் கழிவானது தோட்டத்திற்கு உரமாகப் பயன்படுவதால், Bio-gas Plant விவசாயியின் நண்பனாகத் திகழ்கிறது.

அதுமட்டுமல்லாமல், பெட்ரோமாக்ஸ் விளக்குபோல், வெளிச்சம் கொடுக்கும் விளக்குகளை நேரிடையாக எரிக்கவும் இயந்திரங்களை இயக்கவும் பயன்படுகிறது. மேலும் சாண எரிவாயு மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுவதால், Bio-gas Plant மின்சாரத்தின் நண்பனாகவும் இருக்கிறது.

சாண எரிவியுக் கலனை நிறுவுவதன் மூலம் நாட்டின் மரபுசாரா எரிசக்தியை சேமிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் நம்மால் உதவி செய்ய முடியும். மேலும் விபரங்களுக்கு சென்னையில் உள்ள கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தை 044-28351019 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

2% வட்டியில் விவசாயிகளுக்கு கடன் - கிசான் கிரெடிட் கார்டு திட்டம்!

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

PM SVANidhi Mobile App மூலம் ரூ.10ஆயிரம் உடனடிக் கடன்-ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம்!

English Summary: Biogas from cow dung as an alternative to the cylinder - Rs 12000 subsidy from the central government!
Published on: 09 December 2020, 11:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now