சிறு வியாபாரிகளுக்கு மானியமோ (Subsidy) அல்லது கடன் தொகையோ கிடைப்பது என்றுமே எட்டாக்கனி தான். அதுவும் சாலையோர வியாபாரிகளுக்கு நிச்சயம் வங்கிக் கடன் கிடைப்பதில்லை. ஆனால், தற்போது அந்த நிலை மாறி, எளிய சிறு வியாபாரிகளுக்கும் கடன் உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துளள்ளார் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi).
சிறு வியாபாரிகளுக்கு கடன்:
சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை (Credit assistance program) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தெரு தெருவாக சென்று வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கான பிரதமரின் கடன் உதவி திட்டத்தின் கீழ், 3 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. இந்தக் கடன் வழங்கும் திட்டத்தால், வியாபாரிகளின் வாழ்வாதாரம் உயரும் என்பதில் ஐயமில்லை.
வியாபாரத்தை விரிவுபடுத்தல்:
பிரதமரின் இந்தக் கடன் வழங்கும் திட்டத்தால், சிறு வியாபாரிகள் (Small traders) தங்களது வியாபாரித்தை விரிவுப்படுத்தி, மென்மேலும் உயர் நிலையை அடைய வழிவகுக்கும். சாலையோர வியாபாரிகளுக்கும், தெருத்தெருவாக வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும் இது நற்செய்தியாகும். கடன் பெற, தங்களுக்கு அருகாமையில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு (Cooperative Bank) சென்று விண்ணப்பிக்கலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
கடன் தவணை மீதான கூட்டுவட்டியாக வசூலித்த தொகையை திருப்பித் தர வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவு!