பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 May, 2022 11:18 AM IST
Government Provide Free Sewing Machines for Women...

நாட்டில் ஒவ்வொரு வகுப்பினருக்கும், பிரிவினருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அரசின் கவனம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீதுதான் உள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் பாதி என்று கூறப்படும் பெண்களுக்காக பல லட்சிய திட்டங்கள் தொடங்கப்பட்டதற்கு இதுவே காரணம்.

இந்த திட்டங்களில் ஒன்று இலவச தையல் இயந்திர திட்டம். பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில், இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தையல் மற்றும் எம்பிராய்டரியில் ஆர்வமுள்ள பெண்களுக்கு அரசு இலவசமாக தையல் இயந்திரங்களை வழங்குகிறது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற இரு பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் மத்திய அரசால் நடத்தப்படும் இலவச தையல் இயந்திரத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டத்திற்காக, ஒவ்வொரு மாநிலத்திலும் 50,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்க, இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 20 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியால், இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த பிரதான்மந்திரி இலவச சிலாய் மெஷின் யோஜனா 2022 மூலம் கிடைக்கும் தையல் இயந்திரத்தின் மூலம் பெண்கள் வீட்டில் தங்களுடைய சொந்த வேலையைத் தொடங்கலாம். இதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.

இலவச தையல் இயந்திர திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

பிரதம மந்திரி இலவச தையல் இயந்திரத் திட்டத்திற்கு, விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.india.gov.in/ க்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்ற பிறகு அதை நிரப்ப வேண்டியது அவசியம். படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, அவர் தேவையான அனைத்து ஆவணங்களையும் உள்ளூர் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க, ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். அனைத்து அளவுகோல்களும் முழுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தவும்.

தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தை இங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் படிக்க:

PMSMY: பெண்களை சுய தொழில் செய்பவராக்கும் மத்திய அரசின் திட்டம்- விண்ணப்பிக்க வாய்ப்பு!

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் திட்டம், எப்படி விண்ணப்பிப்பது?

English Summary: Federal Government to provide free sewing machines for women!
Published on: 02 May 2022, 11:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now