மத்திய அரசின் கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தின் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 202 ரூபாய் ஊதியத்துடன், 125 நாட்கள் வேலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள்
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா நோய் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு இன்னும் பல மாநிலங்களில் தொடர்கிறது. இதனால்,பிற மாநிலங்களில் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
அவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கிராமப்பற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு நல்க , கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டத்தை (Garib Kalyan Rojgar Abhiyaan) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
மோடி துவக்கிவைத்தார்
பீகார் மாநிலத்தின் ககாரியா மாவட்டத்தில் தெலிகார் கிராமத்தில் இந்த திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அண்மையில் துவக்கிவைத்தார்.
ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
உள்கட்டமைப்பு வசதி
6 மாநிலங்களின் 116 மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக 25 வெவ்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த மாவட்டங்களில் 125 நாட்கள் நடைபெற உள்ள பணிகள் மூலம் மொத்தம் 25000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பை வழங்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது
தொழிலாளர்கள் தங்களுடைய திறமைக்கு ஏற்க பல்வேறு துறைகளில் 25 திட்ட பணிகளில் வேலை செய்யும் வாய்ப்பும் அளிக்கப்பட உள்ளது.
அதாவது தேசிய சாலை திட்டப் பணிகள், சுகாதாரப் பணிகள், கிணறு தோண்டுதல், நீர் சேமிப்பு, தோட்டக்கலை, அங்கன்வாடி மையப் பணிகள், ரயில்வே பணிகள், சமூக கழிப்பிட வளாகம் அமைத்தல், கிராம பஞ்சாயத்து பணிகள், ஊரக சாலைப்பணிகள், பிரதான் மந்திரி கிராமின் அவாஸ் யோஜ்னா பணிகள் (Pradhan Mantri Gramin Awas Yojana Work), பிஎம் கஷூம் யோஜ்னா (PM Kusum Mission), ஜல் ஜீவன் மிஷன்(Jal Jeevan Mission), பிரதான் மந்திரி உர்கன் கங்கா பணிகள் (Pradhan Mantri Urgan ganga Works) உள்ளிட்ட 25 வகையான பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் - அமைச்சர் காமராஜ்!
இந்தப் புதிய திட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 202 ரூபாயை ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 125 நாட்களுக்கு மொத்தம் 25,250 ரூபாயை அவர்கள் ஊதியமாகப் பெற முடியும்.
யாரெல்லாம் பலனடைவர்
மத்திய அரசு ஏற்பாடு செய்து கொடுத்த போக்குவரத்து வசதி மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் பயனடைய முடியும்.
அதேநேரத்தில் சொந்த முயற்சி மற்றும் போக்குவரத்து மூலம் ஊர் திரும்பிய தொழிலாளர்கள், தங்களது மாவட்ட மாஜிஸ்திரேட்டை அணுகி, மத்திய அரசின் கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தின் தொழிலாளர்கள் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்பதை உறுதி செய்துள்ள வேண்டும். இல்லையெனில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இத்திட்டப் பணிகள் அனைத்தும், மாநில அரசு அதிகாரிகள்மூலம் நிர்வகிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
கலப்பினம் இல்லாத பாரம்பரிய நெல் ரகங்கள்
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!