மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 December, 2023 6:02 PM IST
PM kisan scheme

பிஎம் கிசான் திட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆதார் எண் விவரத்தை வங்கி கணக்குடன் இணைக்காமலும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நில ஆவணங்களை இணைக்காமலும் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு- பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 81,987 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு 15 தவணைகளாக தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

பி.எம்.கிசான் திட்ட வழிகாட்டுதலின்படி பயனாளிகள் தொடர்ந்து தங்கள் தவணைத் தொகை பெற்றிட இ.கே.ஒய்.சி பதிவேற்றம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 7,885 பயனாளிகள் இத்திட்டத்தில் இ.கே.ஒய்.சி பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளனர். எனவே, தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்யலாம் அல்லது பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டும் இ.கே.ஒய்.சி செய்யலாம்.

பி.எம்.கிசான் சிறப்பு முகாம்:

மேலும், பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை பயன்பெறாத தகுதி உள்ள விவசாயிகளை இணைத்திட கிராம அளவிலான அலுவலர்கள் (Village Nodal Officer) நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான முகாம் 15.01.2024 வரை அந்தந்த கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

எனவே விவசாயிகள் தங்கள் பகுதியில் உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை அணுகி இதுவரை பதிவு செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் பதிவு செய்திடவும் மற்றும் பி.எம்.கிசான் முக செயலி மூலம் விவசாயி கண்சிமிட்டல் மூலம் எளிமையாக இ.கே.ஒய்.சி பணியினை செய்து முடிக்க கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் பி.எம்.கிசான் திட்ட அடுத்த தவணைத் தொகையை தொடர்ந்து விவசாயிகள் பெற இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில ஆவணங்களை சமர்பிக்காத விவசாயிகள்:

இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,127 விவசாயிகள் ஆதார் எண் விவரத்தை வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். இத்திட்டத்தில் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுவரை 17,731 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்காமல் உள்ளனர்.

Read more: கைக்கொடுத்த வெள்ளை முஸ்லி மூலிகை- ஆண்டுக்கு 25 கோடி வருமானம்!

இப்பணிகளை முடித்தால் மட்டுமே பி.எம்.கிசான் நிதி தொடர்ந்து விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு வட்டார அளவிலான வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், இ.., தெரிவித்துள்ளார்.

Read more: Vi SmartAgri திட்டம்- விவசாய பணிகளில் உள்ளீடு செலவு 23% வரை குறைவு

English Summary: good news for farmers who do not attach land document in PM kisan scheme
Published on: 28 December 2023, 06:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now