கோழித் தீவனத் தொழிலில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் சோயாமீல், பதுக்கல்களைத் தடுக்கவும், உள்நாட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் ஜூன் 2022 வரை கையிருப்பு வைத்திருக்கும் வரம்புகளை ஒன்றிய அரசு வெள்ளிக்கிழமை விதித்துள்ளது. இந்த வரம்புகள் ஜூன் 30,2022 வரை நடைமுறையில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளி வந்துள்ளது.
பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தானியப் பயிர்களான அரிசி, சோளம், கோதுமை, ஓட்ஸ், பார்லே போன்றவையும் மற்றும் உபதானியப் பொருட்களான நெல் / கோதுமை, உமி, தவிடு போன்றவற்றையும் தீவனமாகக் கொடுக்கப்படுகிறது. மேலும் மீன் தோல் கழிவுகள், இறைச்சி கழிவுகள், சோயாபீன் எண்ணெய்க் கழிவுகள், கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றையும் கோழித் தீவனமாகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடதக்கது.
சமீபத்தில், பதுக்கல்கள் அதிகமாகி வரும் நிலையில், விலை கட்டுகடங்காமல் உயர்வதை காண முடிகிறது. ஆகவே இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில், அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. கோழித் தீவனத் தொழில் மிக முக்கியமான பொருள் சோயாமீல் ஆகும்.
இந் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் 1955 அட்டவணையில் திருத்தம் செய்து ஜூன் 30,2022 வரை சோயாமீலை அத்தியாவசியப் பொருளாக அறிவிக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சோயாமீல் செயலிகள், மில்லர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் அதிகபட்சமாக 90நாட்கள் உற்பத்தியை கையிருப்பில் வைத்திருக்க முடியும், மேலும் அவர்கள் சேமிப்பு இடத்தை அறிவிக்க வேண்டும்.
அரசால் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட சேமிப்பு இடத்துடன் அதிகபட்சமாக 160டன் இருப்பு வைத்திருக்க முடியும்.
இது தவிர அதிக கையிருப்பு வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க: