மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 January, 2022 12:06 PM IST
How to open a Post Office Small Savings Account?

சேமிப்புக் கணக்கு, கிசான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), தேசிய மாதாந்திர வருமானத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ( SCSS ), RD மற்றும் நேரடி வைப்பு கணக்குகள் போன்ற பல்வேறு முதலீட்டு திட்டங்களை இந்தியா போஸ்ட் வழங்குகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் திறக்க, பின்வரும் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.

கணக்கு திறப்பு படிவம் தபால் அலுவலகத்தில் கிடைக்கும், கணக்கு திறப்பு படிவத்தை வாடிக்கையாளர் KYC படிவத்துடன் நிரப்புதல் வேண்டும். வாடிக்கையாளர் விருப்பமான திட்டத்தையும் குறிப்பிட வேண்டும்.

தேவையான ஆவணங்களின் விவரம்

படிவத்துடன் ஒருவர் பின்வருவனவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்:

  • பான் கார்டு
  • ஆதார் அட்டை
  • ஆதார் இல்லை என்றால், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது MNREGA அட்டை போன்ற எந்த ஆவணமும் சமர்ப்பிக்கப்படலாம், குழந்தைகளுக்கான கணக்கில், பிறப்புச் சான்றிதழ் அல்லது DoB ஆதாரம் அவசியமாகும்.
  • சுகன்யா சம்ரித்தி கணக்கிற்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்.
  • கூட்டுக் கணக்காக இருந்தால், அனைத்து கூட்டு வைத்திருப்பவர்களின் KYC ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

இ-பேங்கிங்/மொபைல் பேங்கிங்

வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், அதே வசதியைப் பயன்படுத்தி மற்ற அஞ்சல் அலுவலக திட்டங்களைப் பொறுத்து பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், வாடிக்கையாளர்கள் இபேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் வசதியைப் பெற்றிடலாம்.

நியமன விவரம்

கணக்கைத் திறக்கும் போது ஒரு நியமனத்தைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் நான்கு நபர்கள் வரை பரிந்துரைக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்

  • முதிர்வு உரிமைகோரல்களில், ரூ.20,000 வரை ரொக்கமாகச் செலுத்தப்படும், இதற்கு மேலான தொகை கணக்கு செலுத்துபவரின் காசோலை மூலம் செலுத்தப்படும் அல்லது தபால் அலுவலக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
  • மேற்கூறிய கணக்குகளை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி மாற்றலாம்.

மேலும் படிக்க:

பட்ஜெட் 2022: இயற்கை விவசாயம் செய்ய உதவித் தொகை எவ்வளவு?

கவனம்! RD கணக்கு மூலம் பணத்தை சேமிப்பவர்கள்! கவனம்

English Summary: How to open a Post Office Small Savings Account? Required
Published on: 19 January 2022, 11:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now