பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 December, 2020 6:27 PM IST
Credit : Maps of India

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் தேசத்தந்தை மகாத்மா. அவரது பெயரில் மத்திய அரசு செயல்படுத்திவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அடித்தளம் அமைத்து தருகிறது. 

வேலைவாய்ப்புக்காக நகரத்தை நோக்கி படையெடுத்த கிராமமக்கள் இன்று சொந்த கிராமத்திலேயே வேலைவாய்ப்பை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதும் இந்தத் திட்டம் தான். 100 நாட்கள் வேலை,  நல்ல சம்பளம் என கிராம மக்களின் பொருளாதாரத் தேவையை இத்திட்டம் பூர்த்தி செய்கிறது.

கொரோனா தொற்றால் உலகக் பொருளாதாரமே முடங்கிய நிலையில், இந்தியாவில் கிராமப்புற பொருளாதாரம் சிறிதும் பாதிக்கப்படாமல் கிராமமக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டதற்கு முழு முதற்காரணம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்றால் (The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act MGNREGA)அது மிகையல்ல.

இத்திட்டம் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி கிராமங்களையும் வளமாக்கி செழுமையாக்கத் துணை நிற்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததோடு, ஆறு, குளம் குட்டை, ஏரிகள் நிரம்பி விவசாயப் பரப்பளவு கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கிராமங்களின் சுற்றுப்புறம் தூய்மையாக்கப்பட்டுள்ளது. மரம் வளர்ப்பு திட்டங்களின் மூலம், பருவநிலை பாதிப்புகளும் படிப்படியாகக் குறைந்துள்ளன.

நீரின்றி அமையாது உலகு என்ற கூற்றினை மெய்யாக்கும் வகையில் முதல்வரின் உத்தரவுப்படி, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு இயற்கை வள மேலாண்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருலுகின்றன.

Credit: The India Forum

தடுப்பணைகள் (Blocks)

கிராமங்களில் தண்ணீரைச் சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும் வாய்க்கால், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணை, கம்பி வலைத் தடுப்பணை, கருங்கல் தடுப்பணை ஆகிய மூன்று வகைகளின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 50,000 தடுப்பணைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீர் வளம் பெருக்குதல் (Water augmentation)

இதுதவிர, நீர் வளத்தை அதிகரிக்கும் பொருட்டு நீர் செறிவூட்டுக் குழிகள்,  தனிநபர் மற்றும் சமுதாயக் கிணறுகள், தனிநபர் பண்ணைக்குட்டைகள், தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சுக் குழிகள், மண் வரப்புகள், கல்வரப்புகள் தொடர்ச்சியான இடைவெளி அகழிகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம், நீர் வளம் அதிகரித்து விவசாயப் பரப்பளவும் அதிகரித்ததோடு விவசாய பகுதிகளில் உள்ள கிணறுகள் ஆழ்துளை கிணறுகள், நீர் செறிவூட்டு கிணறுகள் மற்றும் நீர் ஆதாரங்கள் நிறைந்து நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு சேமிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

53 வகை பணிகள் (53 Types of Tasks)

இத்திட்டத்தின் கீழ் ஊரக மக்களின் வாழ்வாதாரங்களை அதிகரிக்கவும், ஊரக
எருக்குழி/உரக் குழி அமைத்து, மாட்டு பசுந்தீவன வளர்ப்புக்கு அடிப்படைக் கட்டமைப்பை அமைத்தல், காளான் வளர்ப்புக் கூடம் அமைத்தல் என 53 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கிராமங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, முறையான சாலை, அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன்றக் கட்டிடங்கள், பள்ளி சுற்றுச்சுவர்கள், உணவு தானியக் கிடங்குகள், உலர் களங்கள், கிராம சந்தைகள், பால் சேகரிக்கும் கூடங்கள், கிராம ஊராட்சி சேவை மையங்கள் போன்ற பல்வேறு வகையான, நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய ஊரக உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் திறன் சாரா தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்குவது மட்டுமில்லாமல், நிலைத்த மற்றும் நீடித்த சொத்துக்கள் எண்ணிக்கை அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் கிராமங்களின் வறுமையை ஒழிக்கும் திட்டமாகவும், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால், கிராமப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டமாகவும் விளங்குகிறது.

பெண்கள் பங்களிப்பு (Contribution of women)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றுபவர்களில் 85 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். பெண்களும் வருமானம் ஈட்டுவதால், அவர்களின் குடும்பநிலை முன்னேற்றமடைந்துள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது. படிப்பை பாதியில் தொடராமல் விட்ட குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு செல்லத் தொடங்குகின்றனர்.

பெண்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் வாழ்விலும் மறுமலர்ச்சியைக் கொண்டு வருகிறது இந்தத் திட்டம். மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு ஏற்ற வேலையை
100 நாள் வேலைத் திட்டத்தில் பெற்றுப் பயனடைகின்றனர்.

இவ்வாறு அனைவரையும் உள்ளடங்கிய, அனைவருக்குமான வளர்ச்சியைத் தரும் திட்டமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தமிழகத்தில்  மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க...

டெல்லியில் போராடும் விவசாயிகள் - NDA தலைவர்களைச் சந்திக்க முடிவு!

மழையால் வெளியேறும் உரஇழப்பைத் தடுக்க - நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்!!

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

English Summary: MGNREGA project to eradicate poverty and enrich villages !!
Published on: 22 December 2020, 06:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now