சொந்தமாக வீடு கட்டுவது அனைவருக்குமே உரிய மிகப் பெரிய கனவு. அக்கனவை நிறைவேற்ற அரசு சார்பில் குடிசை மாற்று வாரியம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் படி பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, 10.20 லட்ச ரூபாயில், 400 சதுர அடி பரப்பளவு வீடுகள் வழங்கும் புதிய திட்டத்தை, குடிசை மாற்று வாரியம் (Slum Clearance Board) அறிவித்துள்ளது.
குறைந்த விலையில் அடுக்குமாடி வீடுகள்:
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு (Home for all) திட்டத்தை, தமிழகத்தில், குடிசை மாற்று வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை, குடிசைப் பகுதிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி ஒதுக்கி வந்தது. தற்போது, குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அதில் அடுக்குமாடி வீடுகள் (Apartment houses) கட்டி, குறைந்த விலையில் விற்கும் திட்டத்தை, குடிசை மாற்று வாரியம் செயல்படுத்த உள்ளது. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த தைலாவரம் பகுதியில், புதிய திட்டத்தை குடிசை மாற்று வாரியம் செயல்படுத்துகிறது. தலா, 400 சதுர அடி பரப்பளவில், 480 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.
குலுக்கல் முறையில் விற்பனை:
வீடுகளை குலுக்கல் முறையில் விற்பனை (Sales) செய்ய, குடிசை மாற்று வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த வீடுகளுக்கு, 11.70 லட்சம் ரூபாய் தோராய விலையாக முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் சார்பாக 1.50 லட்ச ரூபாய் மானியம் (Subsidy) வழங்கப்படும். இதனால், 10.20 லட்ச ரூபாயை, ஆறு தவணைகளில் செலுத்தலாம்.
தகுதிகள் (ம) விண்ணப்பிக்கும் முறை:
இந்தியாவில் வேறு எங்கும், தன் பெயரிலோ, குடும்பத்தினர் பெயரிலோ சொந்தமாக வீடு, மனை இல்லாதவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தின், www.tnscb.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என, வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகின்ற டிசம்பர் 31, 2020.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு! பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக் ஷா திட்டம்!
ஒரே முதலீட்டில் மாதந்தோறும் ரூ.4000/- பென்சன் பெற்றிடுங்கள்!