பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் பணத்தை இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 15 ஆம் தேதியன்று நரேந்திர மோடி அரசு விவசாயிகளின் கணக்கில் மாற்ற முடியும். 10வது தவணையாக ரூ.2,000 விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது.
அதே நேரத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணத்தை மாற்றியது. இதுவரை, நாட்டில் உள்ள 11.37 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு, 1.58 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, அரசு நேரடியாக மாற்றியுள்ளது.
சிறு, குறு விவசாயிகளை மனதில் வைத்து மோடி அரசால் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் கணக்கில் ரூ.2,000 செலுத்தப்படுகிறது. இதுவரை விவசாயிகளின் கணக்குகளுக்கு 9 தவணைகளில் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
நீங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், நீங்கள் பதிவு செய்ய வேண்டும். இதனுடன் உங்கள் ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. பதிவு செய்ய, விவசாயிகள் தங்கள் ரேஷன் கார்டு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் மற்றும் பிற தேவையான ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வீட்டில் அமர்ந்து எப்படி பதிவு செய்வது(How to record sitting at home)
-
இப்போது கிசான் சம்மன் நிதியின் பதிவைப் பெற நீங்கள் அங்கும் இங்கும் அலையத் தேவையில்லை. உங்கள் மொபைலில் இருந்து மட்டுமே பதிவு செய்ய முடியும்.
-
முதலில் உங்கள் மொபைலில் PMKISAN GOI APP ஐ பதிவிறக்கம் செய்யவும்.
-
இப்போது செயலியைத் திறந்து புதிய விவசாயி பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.
-
இப்போது ஆதாரை உள்ளிடுவதற்கான விருப்பம் உங்கள் திரையில் வரும். அதற்குச் சென்று ஆதார் எண்ணை உள்ளிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டையும் எழுதவும்.
-
இந்த செயல்முறையை முடித்த பிறகு, பதிவு படிவம் உங்கள் முன் தோன்றும். இதில், உங்கள் பெயர், வங்கி விவரங்கள் மற்றும் பிற தகவல்களை உள்ளிட வேண்டும்.
-
அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, சமர்ப்பிக்கும் விருப்பம் வரும். இதை கிளிக் செய்து, உங்கள் பதிவை செய்து முடிக்கலாம்.
மேலும் படிக்க:
PM Kisan திட்டத்தில் இது ஆறாவது மாற்றம்! விவரம் இதோ!
PM Kisan-இன் 10ஆம் தவணை! ரூ.2000த்திற்கு பதில் ரூ.4000 யாருக்கு?