மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC- Mahila Samman Savings Certificate) திட்டத்தில் அதிகளவிலான பெண்கள் இணைந்து பயனடையுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுக்கோள் வைத்துள்ளார். MSSC திட்டம் விரிவாக இப்பகுதியில் காணலாம்.
MSSC திட்டம் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான யூனியன் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. இது நிதி உள்ளடக்கம் மற்றும் பெண்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, டெல்லியில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழை (MSSC) தொடங்கி வைத்தார். இந்த முதலீட்டு திட்டம் மூலம் பெண்களின் வாழ்வியலை மேம்படுத்த இயலும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தான் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ரீ-டிவிட் செய்து, மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC- Mahila Samman Savings Certificate) திட்டத்தில் அதிகளவிலான பெண்கள் இணைந்து பயனடையுமாறு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
MSSC திட்டம்:
பெண்களுக்கான புதிய சிறுசேமிப்புத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) ஏப்ரல் 1, 2023 அன்று தொடங்கப்பட்டது.
மார்ச் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன், தனக்காக ஒரு பெண் அல்லது மைனர் பெண்ணின் சார்பாக பாதுகாவலர் படிவம் - I இல் விண்ணப்பித்தில் அஞ்சலகத்தில் கணக்கினை தொடங்கலாம். இந்தத் திட்டம் மார்ச் 2025 வரை முதலீட்டிற்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தில் அக்கெளண்ட் ஒருவரின் பெயரில் மட்டுமே இருக்கும்.
எவ்வளவு ரூபாய் வரை முதலீடு செய்யலாம்?
ஒரே நபர் எத்தனை அக்களெண்டினை வேண்டுமானாலும் தன் பெயரில் தொடங்கலாம். அதே நேரத்தில் ஒரு கணக்கிற்கும், மற்றொரு கணக்கினை திறப்பதற்கும் இடையே மூன்று மாத கால இடைவெளி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூபாய் 1000 மற்றும் ரூபாய் 100 இன் மடங்குகளில் எந்தத் தொகையையும், அதிகபட்ச வரம்பான ரூபாய் 2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். கூடுதலாக டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படாது.
வட்டி எவ்வளவு?
இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.5% ஆகும். வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு, கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் விதிகளை மீறித் தொடங்கப்பட்ட அல்லது டெபாசிட் செய்யப்பட்ட கணக்குகள் கண்டறியும் பட்சத்தில், கணக்கு வைத்திருப்பவருக்குச் செலுத்த வேண்டிய வட்டி, அஞ்சலக சேமிப்புக் கணக்கிற்குப் பொருந்தக்கூடிய விகிதத்தில் கணக்கிடப்படும்.
கணக்கை முன்கூட்டியே மூட இயலுமா?
பின்வரும் நிகழ்வுகளைத் தவிர, முதிர்வு காலத்திற்கு முன் கணக்கு மூடப்படாது.
- கணக்கு வைத்திருப்பவரின் மரணம்.
- கணக்கு வைத்திருப்பவரின் உயிருக்கு ஆபத்தான நோய்களில் மருத்துவ உதவி அல்லது பாதுகாவலரின் இறப்பு போன்ற எதிர்பாராத நிலைகள் அல்லது கணக்கு வைத்திருப்பவருக்கு தேவையற்ற சிரமங்களை உள்ளது என்று சம்பந்தப்பட்ட தபால் அலுவலகம் அல்லது வங்கி கருதினால் கணக்கை முன்கூட்டியே மூட அனுமதிக்கும்.
- ஒரு கணக்கு முன்கூட்டியே மூடப்பட்டால், அசல் தொகைக்கான வட்டி, கணக்கு வைத்திருக்கும் திட்டத்திற்கு பொருந்தக்கூடிய விகிதத்தில் செலுத்தப்படும்.
- துணைப் பத்தி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும், படிவம்-4 இல் உள்ள விண்ணப்பத்தில் கணக்குத் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்கள் முடிந்த பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கு அனுமதிக்கப்படலாம்.
- கணக்கில் அவ்வப்போது நிலுவையில் இருக்கும் இருப்பு இந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தை விட 2% குறைவான வட்டி விகிதத்திற்கு மட்டுமே தகுதியுடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
குடும்பத்தோடு கோடையிலிருந்து தப்பிக்க.. டாப் 10 சுற்றுலாத்தலம் இதுதான்