பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம் (PMSBY), பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் (PMJJBY) ஆகியவை சமூகப் பாதுகாப்பை வழங்குவதில் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இந்நிலையில் இத்திட்டத்தினை குறித்து சுருக்கமாக காணலாம்.
பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம்: Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)
PMJJBY என்பது ஒரு வருட ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும், இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது, எந்த காரணத்திற்காகவும் (இறப்பிற்கு) கவரேஜ் வழங்குகிறது.
தகுதி: வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் 18-50 வயதுக்குட்பட்ட தனிநபர் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய தகுதி உடையவர்கள். 50 வயதை முடிக்கும் முன் திட்டத்தில் சேரும் நபர்கள், வழக்கமான பிரீமியத்தைச் செலுத்துவதன் மூலம், 55 வயது வரையில் காப்பீடு திட்ட பலன்களை பெற இயலும்.
பலன்கள்:
பிரீமியம் தொகை- ரூ.436/- (ஆண்டுக்கு)
ஆயுள் காப்பீடுத் தொகை- ரூ. 2 லட்சம் ரூபாய் (ஏதேனும் காரணத்தால் மரணம் ஏற்பட்டால்)
பதிவுசெய்வது எப்படி?
இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்தல் கணக்கு வைத்திருப்பவரின் வங்கியின் கிளை/ இணையதளம் அல்லது தபால் அலுவலக சேமிப்பு வங்கிக் கணக்காக இருந்தால் தபால் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பிரீமியம், கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து ஒரு முறை கட்டாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே டெபிட் செய்யப்படுகிறது. திட்டம் மற்றும் படிவங்கள் பற்றிய விரிவான தகவல்கள் (இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில்) https://jansuraksha.gov.in இல் கிடைக்கின்றன.
சாதனைகள்: 26.04.2023 நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் 16.19 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். 6,64,520 கோரிக்கைகளுக்கு ரூ.13,290.40 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம்: Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)
விபத்து மரணம் மற்றும் ஊனமுற்றோர் காப்பீட்டை ஆண்டுக்கு வெறும் ரூ. 20 பிரீமியத்தில் வழங்குகிறது. 18-70 வயதுக்குட்பட்ட அனைவரும் இந்த விபத்துக் காப்பீடு திட்டத்தில் பங்குபெறலாம். அனைத்து வங்கி/அஞ்சலகத்தின் தனிப்பட்ட சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களும் PMSBY திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள்.
விபத்து நிகழ்ந்திருப்பின், கோரிக்கைக்கான ஆவணங்களை வங்கி/தபால் நிலையத்தில் சமர்ப்பிக்கவும். விபத்தால் மரணம் அடைந்திருப்பின் 2 லட்சமும், விபத்தில் நிரந்தர குறைபாடு அடைந்திருப்பின் ரூ.2 லட்சமும், பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பிரீமியம், கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து ஒரு முறை கட்டாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே டெபிட் செய்யப்படுகிறது. திட்டம் மற்றும் படிவங்கள் பற்றிய விரிவான தகவல்கள் (இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில்) https://jansuraksha.gov.in இல் கிடைக்கின்றன.
ஏப்ரல் 26-ல் பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்தத்திட்டத்தின் கீழ் மொத்தம் 34.18 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். 1,15,951 கோரிக்கைகளுக்கு ரூ.2,302.26 கோடி வழங்கப்பட்டுள்ளது.
PIc courtesy: PIB
மேலும் காண்க:
வாத்தியார் வேலையை உதறித்தள்ளி விவசாயம்- ஆண்டுக்கு 30 லட்சம் வருமானம்!