Central

Monday, 07 February 2022 10:29 AM , by: Deiva Bindhiya

Post Office Scheme: At maturity Up to Rs 20 lakh can be obtained!

தபால் அலுவலகம், முதலீட்டாளர்களுக்கு விரும்பத்தக்க வகையில் வருவாயை வழங்கும் பல பாதுகாப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. முதலீட்டாளர்கள் தங்களின் எதிர்காலத்தை, குறிப்பாக ஓய்வூதியத்தைப் பாதுகாப்பதற்காக அஞ்சல் அலுவலகம் வழங்கும் பல்வேறு திட்டங்களில் தங்கள் பணத்தைப் சேமித்தும் வருகிறார்கள்.

இப்படியான தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பதாகும். இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை நகர்வுகளால் பணத்தை இழக்கும் ஆபத்து இல்லாத சிறந்த திட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த திட்டத்தில், தினசரி ரூ.150 சேமித்தால் முதிர்வு காலத்தில் ரூ. 20 லட்சத்தைப் பெற முடியும் என்பது குறிப்பிடதக்கது.

தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதியின், முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். இருப்பினும், முதிர்வு நேரத்தில் நீங்கள் ரூ. 20 லட்சத்தைப் பெற விரும்பவிட்டால், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் வரம்பை இரண்டு முறை நீட்டிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உங்களுக்கு வரிச் சலுகைகளும் உண்டு. தற்போது, இந்தத் திட்டத்தில் ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் உங்கள் முதலீடு அதிகரித்து வருவதால், உங்கள் பணமும் அதிகரிக்கும், லாபமும் ஏறும்.

ரூ.20 லட்சம் ரிட்டன் எப்படி கிடைக்கும்? (How to get Rs.20 lakh return?)

நீங்கள் 25 வயதில் உள்ளீர்கள் என்றால், மேலும், மாதம் சராசரியாக 35,000 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதியில் மாதத்திற்கு சுமார் ரூ. 4500 முதலீடு செய்ய வேண்டும், அதாவது ஒரு நாளைக்கு சுமார் ரூ.150 முதலீடு செய்ய வேண்டும். இது ஒரு வருடத்தில் ரூ. 54,000 ஆகும்.

20 ஆண்டுகளில் உங்கள் முதலீடு ரூ.10.80 லட்சமாக மாறும். இதனுடன் கூட்டு வட்டியையும் சேர்த்து, உங்கள் திட்டத்தின், முதிர்வு நேரத்தில் சுமார் ரூ.20 லட்சத்தைப் பெறுவீர்கள். மேலும், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் நீங்கள் வரிச் சலுகைகளையும் பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

செய்தி: 

CCI அப்பல்லோ, MRF மற்றும் பிற டயர் தயாரிப்பாளர்களுக்கு ₹ 1,788 கோடி அபராதம் விதித்தது

மேலும் இந்த திட்டம் தொடர்பாக, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள். திட்டத்தில் ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடி பெற்றிடலாம். மேலும், PPF-ல் முதலீடு செய்வது ‘EEE’ வகையின் கீழ் வரும் என்பதால், PPF இல் சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகையும் வரி இல்லாதது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

சமத்துவச் சிலையின் அடையாளமாக ராமானுஜர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)