மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 March, 2021 12:27 PM IST
Credit : Financial Express

பிரதான் மந்திரி கிஷான் மந்தன் திட்டத்தின் மூலம், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் 3000 ரூபாய் வழங்கப்படுகிறது.

நலத்திட்டங்கள் (Welfare schemes)

விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அண்மையில், மத்திய அரசால் வயது முதிர்ந்த விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், நாட்டில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் பிரதான் மந்திரி கிஷான் மந்தன் திட்டம் (Pradhan Mantri Kisan Mandhan Yojana) அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

மாதாமாதம் ஓய்வூதியம் (Monthly pension)

பிரதான் மந்திரி கிஷான் மந்தன் திட்டத்தின் மூலம், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.36,000 (Rs 36,000 per year)

மாதம் 3 ஆயிரம் வீதம் ஓர் ஆண்டுக்கு மொத்தம் 36,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது.

மனைவிக்கும் ஓய்வூதியம் (Spouse pension)

  • ஒருவேளை, பயனாளி 60 வயதைக் கடந்து, உயிரிழந்த நிலையில் அவரது வாழ்க்கைத் துணைக்கு 50 விழுக்காடு ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.

  • பயனாளிக்கு வாழ்க்கை துணை இல்லாத சூழலில், வேறு யாரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற இயலாது.

தகுதி (Qualification)

  • இத்திட்டத்தின் மூலம் பயன் பெற 18 முதல் 40 வயதிற்குட்பட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

  • அதோடு, அவர்களின் வருமானம் பதினைந்தாயிரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

 

39 லட்சம் பேர் (39 lakh people)

இதுவரையில், இந்த திட்டத்தில் சுமார் 39 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

விண்ணப்பிப்பது எப்படி? (How to apply?)

விவசாயிகள், இந்த ஓய்வூதிய திட்டத்தில் பயனடையத்ட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://maandhan.in/, இந்த இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம். பதிவு செய்த பின், விவசாயிகள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட வயதின் அடிப்படையில், 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க...

மூத்த குடிமக்களுக்கு ஓர் நற்செய்தி! FD வட்டிச் சலுகை நீட்டிப்பு!

இறந்த விவசாயி பெயரில் டிராக்டர் கடன் - மெகா மோசடி செய்த நிறுவனம்!

10 ரூபாயில் சூப்பர் திட்டம்! அரசு ஊழியர் அல்லாதவர்களும் பென்ஷன் பெற வாய்ப்பு!

English Summary: Rs.3000 per month pension scheme for farmers - How to register your name?
Published on: 29 March 2021, 12:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now