கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற்றவர்களுக்கு, ஓராண்டுக்கு வட்டியில் 2 சதவீதத்தை மானியமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முத்ரா கடன்
குறைந்த அளவிலான முதலீட்டில் சாலையோரம் கடை வைத்திருப்பவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட குறு வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதான் மந்திரி முத்ரா யோஜ்னா (Pradhan Mantri Mudra Yojana) என்னும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி
-
குறு வியாபாரிகள் 50 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
-
சிசு கடன் என்ற பெயரில் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும், கிஷோர் கடன் என்ற பெயரில் 5 லட்சம் ரூபாய் வரை
-
தருன் கடன் என்ற பெயரில், 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் என மூன்று பிரிவுகளில் கடன் வழங்கப்படுகிறது.
2 சதவீதம் மானியம் அறிவிப்பு
இந்நிலையில், நாடுமுழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா நோய் தொற்றைத் தடுக்கும் விதமாக, ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாக குறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களின் நலன் கருதி, முத்ரா கடன் திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் ரூபாய் வரை சிசு கடன் (Shishu Loan) திட்டத்தில் கடன் பெற்றவர்களுக்கு ஓராண்டுக்கு, வட்டியில் 2 சதவீதம் மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சிறப்பு சலுகை வரும் 12 மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனை
-
சிசு கடன் பெற்றவர்கள், கடந்த மார்ச் மாதம் வரை தங்களது தவணைத் தொகையை தவறாமல் செலுத்தியிருக்க வேண்டியது அவசியம்.
-
கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவர்களும், வாராக் கடன் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருப்பவர்களும் இந்த சலுகையை அனுபவிக்க முடியாது
-
இந்த திட்டத்தை செயல்படுத்துவதால், மத்திய அரசுக்கு கூடுதலாக ஆயிரத்து 542 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது
Elavarase Sivakumar
Krishi jagran
மேலும் படிக்க...
RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?
Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!
நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!