தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கௌரவ நிதித் திட்டமானது 01 டிசம்பர் 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது, நிலம் உள்ள அனைத்து விவசாயிகளின் நிதி தேவைக்காகவும், சரியான பயிர் ஆரோக்கியம் மற்றும் அதிக விளைச்சலை உறுதி செய்திடவும் மத்திய அரசினால் விவசாய குடும்பத்தில் நிலம் உள்ள ஒருவருக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6000/- என மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பதிவு செய்த மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணைத் தொகைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. தற்போது 12வது தவணைத் தொகை பெறுவதற்கு ஜூலை 31-க்குள், விவசாயிகள் தங்களது நிலம் தொடர்பான ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டத்தில் பயன்பெறும் பயளாளிகளின் நில ஆவணங்களை சரிபார்க்கும் பணி அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
எனவே, இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்களான:
- பட்டா
- சிட்டா மற்றும்
- ஆதார் நகல்-உடன்
தங்கள் தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் சமர்பித்து பிப்ரவரி 1,2019க்கு முன்னரே நிலம் இருப்பதனை உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க: New GST Rates: இன்று முதல் விலை உயரும் மற்றும் குறையும் பொருட்களின் பட்டியல்!
நில ஆவணங்களை உறுதி செய்த பின்னரே அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் உடனடியாக ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கினை இணைத்து PM-Kisan வலைதளத்தில் e-KYC பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயன் பெற்றிட மதுரை, வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: