பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தகுதியான தையல் தொழிலில் முன் அனுபவமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள் தகவல்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், மேற்கண்ட இன மக்களில் 10 நபர்கள் கொண்ட குழுவாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அதாவது (Readymade Garment Manufacturing) அமைக்க தகுதியான குழுக்களுக்கு தலா ரூ.3.00 இலட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
1. குறைந்தபட்சம் வயது வரம்பு 20
2. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கலாம்.
3. விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைப் பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
4. 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும் .
5. 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.
6. குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்., மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
7. குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்., மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
மேலும் படிக்க: 'இ நாம்' திட்டத்தில் விளைபொருள் விற்க கலெக்டர் அழைப்பு!
இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள தையல் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மக்கள் குழுவாகக் கொண்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பயன்பெறுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன், அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் படிக்க:
10 புதிய அறிவிப்புகள்- மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர்
மீனவர்கள் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!