ஓய்வு பெற்ற பின் மருத்துச் செலவுகள் (Medical expenses) பெரிய அளவில் அதிகரிக்கும், கூடுதல் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும், இதனால் கவலைகளும் அதிகரிக்கும். இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட நமக்குத் தேவையானது ரிஸ்க் இல்லாத முதலீட்டுத் திட்டம் தான்.
பிபிஎப்(PPF)
அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்பட்டும் பிபிஎப் திட்டம் முதலீடுகள் (PPF Investment) ஓய்வு பெறுவோருக்கான சிறந்த முதலீடாக உள்ளது, நிலையான வட்டி வருமானம், ரிஸ்க் குறைவு, வரிச் சலுகை எனப் பல நன்மைகள் உள்ளது. தற்போதை நிலையில் பிபிஎப் திட்டத்திற்குச் சந்தையில் சுமார் 7.1 சதவீதம் வட்டி (Interest) வருமானம் கிடைக்கிறது. 15 வருடத்தில் முதிர்வடையும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை 5 வருட காலத்திற்குத் தேவையைப் பொருத்து அதிகப்படியாக 50 சதவீத பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.
அரசு பத்திரங்களில் முதலீடு
அரசு பத்திரங்கள் மீதான முதலீடுகளில் ஆபத்து மிகவும் குறைவு என்பதால், ஓய்வு கால முதலீட்டுக்கு திட்டமிடும் அனைவரும் எவ்விதமான ஐயமும் இல்லாமல் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ஆர்பிஐ பண்ட்ஸ் (RBI Funds), ஆர்ஈசி, ஐஆர்எப்சி, பிஎப்சி எனப் பல அரசு பத்திரங்கள் உள்ளது. வரிக்கு முந்தைய வருமானமாகச் சுமார் 7 சதவீதம் லாபத்தை (Profit) அளிக்கிறது.
நேஷனல் பென்ஷன் பண்ட்
நேஷனல் பென்ஷன் பண்ட் (National Pension Fund) அரசு முதலீட்டு திட்டமான நேஷனல் பென்ஷன் பண்ட் திட்டத்தில் Tier 1 மற்றும் Tier 2 என இரு வகையான முதலீட்டுத் திட்டங்கள் உடன் அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை (Share Market), கார்பரேட் முதலீடு என முதலீட்டு தேர்வுகளும் உண்டு. எனவே ஒய்வுகால முதலீட்டுக்காகத் திட்டமிடும் அனைவருக்கும் ரிஸ்க் மிகவும் குறைவாக இருக்கும் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
வங்கியில் சேமிப்பவரா நீங்கள்? ஃபிக்ஸட் டெபாசிட்டில் இலாபம்! வட்டி விகிதத்தை அதிகரித்தது கனரா வங்கி!
Voluntary Provident Fund
நீங்கள் பணியில் இருக்கும்போதே உங்கள் ஒய்வு காலத்திற்கான நிதியை விபிஎப் (VPF) எனப்படும் Voluntary Provident Fund மூலம் சேமிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் வருடத்திற்குச் சுமார் 1.5 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை இதில் முதலீடு செய்து வருமான வரிச் சலுகை (Income tax deduction) பெற முடியும். இத்திட்டத்தில் அதிகப்படியாக ஒருவரது மாத சம்பளத்தில் அடிப்படை சம்பளத்தை முழுவதுமாக விபிஎப் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
பெண்களுக்கு வழங்கும் ஸ்கூட்டருக்கு மானிய இலக்கு குறைப்பு!
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் வங்கிகளை விடவும் அதிக வட்டி வருமானத்தைத் தரும் குறுகிய காலப் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் (Post Office Time Deposit Scheme) கூடிய விரைவில் ஓய்வு பெறுவோருக்கு சிறந்த முதலீடாக இருக்கும். இந்தத் திட்டத்தில் ஒருவர் 1 முதல் 5 வருட காலத்திற்குள் முதிர்வு காலத்தைத் தேர்வு செய்துக்கொள்ளலாம். இத்திட்டம் மீதான வட்டியை ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு நிர்ணயம் செய்யும். தற்போது 5 ஆண்டுப் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு அரசு 6.7 சதவீத வட்டி வருமானத்தை அளிக்கிறது.
ஓய்வு கால் வருமானத்திற்கு இன்றே முடிவெடுங்கள். வருங்காலம் வசந்தமாகும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பெண்களுக்கு வழங்கும் ஸ்கூட்டருக்கு மானிய இலக்கு குறைப்பு!
வங்கியில் சேமிப்பவரா நீங்கள்? ஃபிக்ஸட் டெபாசிட்டில் இலாபம்! வட்டி விகிதத்தை அதிகரித்தது கனரா வங்கி!