இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். விவசாயிகள் நமது இந்தியாவின் முதுகெலும்பு. நாம் விவசாய நாடாக இருந்தாலும், இங்குள்ள விவசாயிகளின் நிலை மோசமாகிறது.
நாட்டில் விவசாயம் செய்வதற்கான முதலீட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் விவசாயம் செய்வது கடினம். இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பல்வேறு வடிவங்களில் மானியம் வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிக்க கடன் அட்டைகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவுகிறது. இதை ஒருபடி மேலே கொண்டு சென்று மத்திய அரசு டிராக்டர்களுக்கும் மானியம் வழங்கி வருகிறது.
விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு டிராக்டர் மிக முக்கியமான இயந்திரம். விதைகளை நடுவது முதல் அறுவடை வரை பல பணிகளில் டிராக்டர் நமக்கு உதவுகிறது. இதை பயன்படுத்தினால், விவசாயிகளுக்கு அனைத்து பணிகளும் எளிதாகும். ஆனால் அனைத்து விவசாயிகளும் அதை வாங்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் பல விவசாயிகளுக்கு இந்த திட்டம் பற்றி தெரியாது.
பிரதமர் கிசான் டிராக்டர் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர்களுக்கு 50 சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்த PM கிசான் டிராக்டர் திட்டத்தின் கீழ் விவசாயிகள் டிராக்டர்களை வாங்கி மானியம் பெறலாம். இந்த திட்டம் நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பெரிதும் உதவும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் டிராக்டர்களை பாதி விலை கொடுத்து வாங்குகின்றனர்.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தும். முதலில் இத்திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் விண்ணப்பம் மூலம் விவசாயிகள் இத்திட்டத்தைப் பெறலாம். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள CSC மையம் அதாவது இ-சேவை மையத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயிகள் ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் நில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவற்றுடன் மொபைல் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு விவரங்களும் தேவை என்பது குறிப்பிடதக்கது.
இத்திட்டத்தின் மூலம் மானியம் பெறுவதற்கு முன்பு கடந்த ஏழு ஆண்டுகளில் இதுபோன்ற டிராக்டரை விவசாயிகள் வாங்கியிருக்கக் கூடாது. ஒரு விவசாயி தனது பெயரில் ஒரு டிராக்டருக்கு மட்டுமே மானியம் பெற முடியும். ஒரு குடும்பத்திலிருந்து ஒரு ஆண் மட்டுமே மானியத்திற்கு விண்ணப்பிக்க முடியும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் பெயரில் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க