Central

Tuesday, 10 September 2019 02:12 PM

இந்தியாவில் பசுக்களைப் பாதுகாப்பதற்காகவும், பசுவதையை தடுப்பதற்காகவும், அவற்றின் எண்ணிக்கையை உயர்த்தவும், "ராஷ்டிரிய காமதேனு ஆயோக்" என்னும் ஆணையத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு உருவாக்கியது. அதன் இயக்குனராக "வல்லப கதிரியா" இருந்து வருகிறார்.

ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற அமைப்பானது சிறு, குறு விவசாயிகள் பயனடையவும், கால்நடைகள்  மருத்துவம், விலங்குகள் அறிவியல், விவசாயப் பல்கலைக்கழகம், மத்திய/மாநில அரசுகளின் பசு இனப்பெருக்கம், வளர்ப்பு,  உயிர்வாயு குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இந்த அமைப்பு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கால்நடைகளை கொண்டு குறிப்பாக கோமியம், மாட்டுச் சாணம் இவற்றை மூலதனமாக கொண்டு தொடங்கப்படும் தொழில்களுக்கு அரசு 60% முதலீடு செய்யும்.

பொதுவாக கால்நடை வளர்ப்பு என்றால், உழுவதற்கம், பால் உற்பத்திக்கும் பயன்படுத்துவார்கள். பாலிலிருந்து பெறப்படும் தயிர், மோர், வெண்ணெய், நெய் என மதிப்பு கூட்டப் பட்ட பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.  இவை அல்லாது  கோமியம், மாட்டுச் சாணம் போன்றவற்றை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட, உயிர் வேளாண்மைக்கு உதவும் வகையில் தொழில் முனைய விரும்புவோருக்கு மத்திய அரசு உதவவுள்ளது.

இளம் தலைமுறையினர், தொழில் முனைய விரும்போர் என அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். இதற்கான வரைவை தயார் செய்து சமர்ப்பிக்கலாம் என்றார். இதற்காக மத்திய அரசு ரூ 500 கோடி  ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிட தக்கது. பசுக்களை பாலிற்காக மட்டுமல்லாமல் அதன் கோமியத்தையும், சாணத்தையும் முறைப்படுத்தி விற்பனை செய்வதற்கான திட்டங்கள் உள்ளதாக கூறினார்கள். பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், தொழில்நுட்ப மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆய்வுகள் செய்யும் படி கேட்டு கொண்டார்.       

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)