Central

Wednesday, 17 March 2021 12:22 PM , by: Elavarse Sivakumar

Credit : You Tube

நகைக் கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே எந்தவித ஆவணங்கள் இல்லாமலேயே ரூ.50 லட்சம் வரை கடன் வாங்கலாம்.

நகைக்கடன் (Jewelry loan)

நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், தொழில் தொடங்கவும், மற்ற தேவைகளுக்காகவும் பலர் தங்களது நகையை வைத்து வங்கிகளில் கடன் வாங்குவார்கள்.

இருப்பினும் நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு வட்டி,அதற்கான செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு உள்ளிட்டத் தகவல்களையெல்லாம் சேகரிக்காமல், கடனை வாங்கிவிட்டு, வட்டி அதிகமாக இருக்கிறதே என்றும் கவலைப்படுவார்கள்.

நீங்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குதான்.

பெரிய அளவில் நகைக் கடன் வாங்குவோருக்கு நல்ல செய்தியாக, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(SBI)இந்த சிறப்புக் கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.

SBI SME Gold Loan

  • SBI SME Gold Loan என்ற இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம்.

  • சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையை மையப்படுத்தி இக்கடன் வழங்கப்படுகிறது.

விதிகள் (Rules)

  • எந்த நிறுவனத்துக்காக கடன் வாங்க விரும்புகிறார்களோ அந்த நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

  • வாராக் கடன் பிரச்சினையில் சிக்கியிருக்கக் கூடாது.

  • நிறுவனத்தில் Balance Sheet தேவையில்லை

ஆவணங்கள் தேவையில்லை (No documentation required)

  • இந்தக் கடனை வாங்குவதற்கு நிதி சார்ந்த ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

  • இந்த நகைக் கடன் Overdraft அல்லது Demand Loan பிரிவின் கீழ் வழங்கப்படும்.

செயல்பாட்டுக்கட்டணம் (Processing Fee)

ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு செயல்பாட்டுக் கட்டணம் ரூ.500 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கு மேலான கடன்களுக்கு வரியுடன் ரூ.1,000 செயல்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும்.

வட்டி (Interest)

இந்த கடனுக்கு வட்டி 7.25% வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க...

வீட்டு நகைகள் தான் பெரிய முதலீடு : எஸ்பிஐ-யின் தங்கம் பணமாக்குதல் திட்டம்!

பணம் செலுத்த இனி எந்த Cardம் தேவையில்லை -வாட்ச் இருந்தால் போதும்!

இந்த மாதமே கடைசி... உங்கள் PAN Card உடன் Aadhar Card இணைத்துவிட்டீர்களா? இப்போதே எளிதாக செய்து முடிங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)