அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 March, 2023 5:08 PM IST
Electricity connection to farmers by TADCO with subsidy according to electric motor HP

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விவசாயிகளிடமிருந்து புதிதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

2022-2023 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்கள்.

இத்திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத்திறன் ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 இலட்சம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும், பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதி என்ன?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகளாகவும், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும்.

துரித மின் இணைப்பு திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணமாக ரூபாய் 2.50 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.25000/-ம் 7.5 HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக்கட்டணம் ரூபாய் 2.75 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூபாய் 27,500/-ம் , 10 HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக்கட்டணம் ரூபாய் 3.00 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூபாய் 30,000/- ம்,  15 HP (குதிரைத்திறன் ) மின் இணைப்பு கட்டணம் ரூபாய் 4.00 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூபாய் 40,000/- க்கான வங்கி வரைவோலையாக அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லா விண்ணப்பதாரர்களின் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.

கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல். "அ" பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த இரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணபத்தினை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.

மேலும் காண்க:

24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட CMWSSB கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்

பிஎம் கிசான்- உங்களது விவரங்களை ஆன்லைனில் திருத்த 6 STEPS போதுமா?

English Summary: Electricity connection to farmers by TADCO with subsidy according to electric motor HP
Published on: 13 March 2023, 05:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now