1. விவசாய தகவல்கள்

விவசாயிகளின் மகன்களுக்கு ரூ.2 லட்சம் – அதிரடி அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 2 lakhs for sons of farmers – action announcement!

விவசாயிகள் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு 2 லட்சம்  ரூபாய் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு  விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், அவரது மகன்களைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருமணம் என்பது மணமக்கள், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கு மகிழ்ச்சியான வைபவமாக அமைவது வழக்கம். வாழ்நாளில் ஒருமுறை நடைபெறும் திருமணம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இந்த மகிழ்ச்சியில்  பங்குகொள்ளும் விதமாகவும், விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வரும் பெண்களை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய அறிவிப்பை இந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர் பஞ்சரத்னா ஆகும்.விவசாயிகளுக்காக பஞ்சரத்னா திட்டத்தில் சில திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ரூ.1 லட்சம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை நடத்தி வருகிறார். அவர் துமகூரு மாவட்டம் திப்தூரில் இந்த யாத்திரை நடத்தினார். அப்போது கட்சி தொண்டர்களிடம் குமாரசாமி பேசியதாவது: விவசாயிகள் கடன்காரர்களாக இருக்கக்கூடாது. இதற்காக நான் எனது பஞ்சரத்னா திட்டத்தில் சில அம்சங்களைச் சேர்த்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு உழவு பணிகளை மேற்கொள்ள ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 10 ஏக்கர் வரை ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

சுகாதார நிலையங்கள்

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு விவசாயிகளின் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்ய கிராம பஞ்சாயத்துகள் தோறும் அரசு பப்ளிக் பள்ளிகள் தொடங்கப்படும். கிராம பஞ்சாயத்துகளில் சுகாதார நிலையங்கள் நிறுவப்படும். விவசாயிகளின் மகன்களுக்கு யாரும் பெண் கொடுப்பது இல்லை என்றும், இதற்கு ஏதாவது வழி காண வேண்டும் என்றும் கோரி என்னிடம் விவசாயிகள் பலர் மனு கொடுத்தனர்.

கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். விவசாயிகள் நமக்கு உணவு வழங்குபவர்கள். அவர்களை நன்றாக வைத்துக்கொள்வது நமது கடமை. இந்த திட்டத்திற்கு தேவையான நிதி எவ்வளவு என்று கணக்கிட்டு அதை ஒதுக்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.  இந்த அறிவிப்பு பெண்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க...

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் சிவன்!

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000!- விபரம் உள்ளே

English Summary: Rs 2 lakhs for sons of farmers – action announcement! Published on: 10 March 2023, 09:25 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.