நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 July, 2023 11:17 AM IST
magalir urimai thogai scheme strict restriction on recruitment of volunteers

வருகிற செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி வேகமெடுத்துள்ள நிலையில் அதில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களை ஈடுபடுத்த அரசு அனுமதித்துள்ளது.

தன்னார்வலர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவித்துள்ள நிலையில், வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர், வருவாய் வட்டாட்சியர் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை மற்றும் பணிகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்திலிருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாநில அலுவலகத்திலிருந்து இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களின் தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்:

  • மாநில அலுவலகத்திலிருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில் ஒவ்வொரு நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்களின் விவரங்கள் இடம் பெற்று இருக்கும்.
  • சில நியாய விலை கடைப்பகுதிகளில் தேவைக்கு அதிகமான தன்னார்வலர்கள் தகவல் தரவு பதிவுப் பணிக்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். சில நியாய விலை கடை பகுதிகளில் போதிய தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. இவர்களுக்கான பணி ஒதுக்கீடு வழங்கும் பொழுது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
  • ஒருவேளை இரண்டு கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் அவர்களுக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பணி வழங்கலாம்.
  • தகவல் உள்ளீடு பணிகளுக்கும், கள ஆய்வுப் பணிகளுக்கும் விருப்பம் தெரிவித்த தன்னார்வலர்களைத் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு பணியின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சம்மதத்தைப் பெற்று பணியில் அமர்த்துதல் வேண்டும்.
  • சில தன்னார்வலர்கள் தற்பொழுது இந்தப் பணி செய்ய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. இது தொடர்பான தகவல் பதிவை கூகுள் சீட்டில் பதிவு செய்ய வேண்டும்.
  • ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள வட்டாட்சியருடன் இணைந்து தன்னார்வலர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

வருவாய் வட்டாட்சியர் செய்ய வேண்டிய பணிகள்:

தன்னார்வலர்களின் தகவல் விவரம் கிடைக்கப்பெற்றவுடன் புதிய தன்னார்வலர்கள் இல்லாத நியாய விலை கடைப் பகுதிகளுக்கு,புதிய தன்னார்வலர்களைக் கண்டறிய வேண்டும்.

  • குறிப்பாக நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் இல்லை. இப்பகுதிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், வேறு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மூலமாக அடையாளம் கண்டு நியமிக்கலாம்.
  • வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. 20% கூடுதல் தன்னார்வலர்களைப் பதிலி (Reserve) தன்னார்வலர்களாகப் பயன்படுத்துவதற்காக அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டும்.
  • இவர்களுக்கு உதவி மையத் தன்னார்வலர்கள் (Help Desk Volunteer) பொறுப்பு வழங்கலாம். விண்ணப்பப் பதிவு பணிக்குத் தேவைப்படும் பொழுது இவர்களை விண்ணப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நியாயவிலைக் கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும். மேற்கண்ட தகவல்களை அனைத்து கள அலுவலர்களுக்கும் தெரியப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களையும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களையும் சிறப்பு திட்ட பணி அலுவலர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் காண்க:

21 முதல் 40 வயது வரையிலான வேளாண் பட்டதாரிகள் கவனத்திற்கு !

English Summary: magalir urimai thogai scheme strict restriction on recruitment of volunteers
Published on: 11 July 2023, 11:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now