1. கால்நடை

பசு மாட்டினை பராமரிக்க குறைந்த வட்டியில் கடன்- ஆட்சியர் அறிவிப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

Kisan Credit Card through Animal Husbandry Department in virudhunagar

கால்நடை வளர்ப்போர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு முக்கிய வாழ்வாதார தொழிலாக கருதப்படுகிறது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கால்நடை வளர்ப்போரின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் புதிய கால்நடைகளை கொள்முதல் செய்த பின்னர், உரிய அளவிலான தீவனம் மற்றும் தாது உப்புகள் வழங்கப்படாததினால் பால் மற்றும் இறைச்சி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விகிதாச்சார முறையில் உரிய நேரத்தில் உரிய அளவில் தீவனம் முறைகளை கடைபிடியாமை ஆகும். விவசாயிகளின் இந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு கால்நடைகளின் பராமரிப்புக்கென அனைத்து வங்கி கிளைகள் மூலம் உழவர் கடன் அட்டை 01.05.2023 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

உழவர் கடன் அட்டை பெறுவதால் என்ன நன்மை?

ஒரு பசு மாட்டினை பராமரிப்பதற்கு ரூபாய் 14,000/- வழங்கப்படுகிறது. இதற்குரிய வட்டி விகிதம் 4 சதவீதமாகும். ஒரு பசு மாடு என்பது 10 ஆடுகளுக்கும், 100 கோழிகளுக்கும் சமமாகும். எனவே கறவை மாடு, ஆடு மற்றும் கோழிப்பண்ணைகளின் பண்ணையாளர்கள் இந்த திட்டத்தில் பங்கெடுத்து கால்நடை பராமரிப்பு செலவினமாக குறைந்த வட்டி விகிததத்தில் வழங்கப்படும் தொகையினை பெற்று பயன்பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

வேளாண்மைத்துறை மூலம் உழவர் கடன் அட்டை பெற்றிருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:

இதில் பயன்பெற விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் கால்நடை கொட்டகை நில ஆவண நகல்

மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகங்களுக்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கால்நடை மருத்துவர், கால்நடை உதவி மருத்துவர் அல்லது கால்நடை ஆய்வாளரிடம் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தனது செய்திக்குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மூலம் முன்னோடி வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு பின்னர் விண்ணப்பதாரது வங்கி கிளைகளுக்கு அனுப்பி பரிசீலிக்கப்பட்டு உழவர் கடன் அட்டையுடன் நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பினை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., தான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண்க:

CASR- IFFCO கூட்டு முயற்சியில் 400 விவசாயிகளுக்கு ட்ரோன் பயிற்சி

English Summary: Kisan Credit Card through Animal Husbandry Department in virudhunagar

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.