21 முதல் 40 வயது வரையிலான வேளாண் பட்டதாரிகள் கவனத்திற்கு !

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
50 percent interest subsidy for agricultural graduates to start business

கோயம்புத்தூர் மாவட்டம் வேளாண்மைத் துறையின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு அம்சமான வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டத்தில் சேர்ந்து வேளாண் பட்டதாரிகள் பயன் பெறலாம் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

வேளாண்மையில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு வளர்ந்துவரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி வேளாண்மை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி இளைஞர்கள், பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதி உதவி பெற்று வங்கி கடனுடன் வேளாண் சார்ந்த தொழிலை புதியதாக தொடங்க முன்வரும் வேளாண் பட்டதாரிகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம்:

மேற்கண்ட திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி உதவி, வட்டி மானியம் போக கூடுதல் மானியமாக விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வங்கி கடன் ஒப்புதல் பெற்ற பிறகு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

திட்டத்தில் பயன்பெற தகுதிகள் என்ன?

இந்த திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் 21 முதல் 40 வயதுடைய வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பிரிவில் குறைந்த பட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கணினி திறன் பெற்ற மற்றும் குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற தகுதி உடையவர்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

10 மற்றும் 12-ம் வகுப்புசான்றிதழ், பட்டபடிப்பிற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்பஅட்டை, தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவை ஆகும்

இந்த திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள பட்டதாரிகள் அக்ரீஸ் நெட் எனும் இணைய வலைதள முகப்பில் பதிவு செய்ய வேண்டும். தங்களின் விரிவான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர், வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்புகொள்ளவும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

இந்த 6 தகுதி போதும்- 50 % மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க!

English Summary: 50 percent interest subsidy for agricultural graduates to start business Published on: 11 July 2023, 10:17 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.