மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 July, 2022 11:46 AM IST

அரசு பள்ளிகளில் படித்துக் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், தகுதியான மாணவிகள், ஜூன் 25ம் தேதி முதல் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் பெயர்களைப் பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு வெளிவந்தது. இன்று கடைசி தேதி ஆகும். விருப்பம் உள்ளவர்கள் இன்று விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!


தமிழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களைப் பள்ளி மாணவிகள் பெறச் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட இருக்கின்றன என்பது கூடுதல் தகவல். இது குறித்த சுற்றறிக்கையும் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!

எதில் விண்ணப்பிக்கலாம்?

https://penkalvi.tn.gov.in என்ற என்ற இணையதளத்தின் மூலமாக மாணவிகள் தங்களின் தகவல்களைப் பதிவு செய்யலாம்.

தேவையான விவரங்கள்

  • மாணவிகளின் விவரங்கள்
  • வங்கிக் கணக்கு விவரம்
  • ஆதார் எண்
  • 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
  • பள்ளி மாற்று சான்றிதழ்கள்

மேலும் படிக்க: மலிவான விலையில் 5G ஐபோன்! இன்றே வாங்குங்க!!

யாரெல்லாம் பயன்பெறலாம்?

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தனது கல்வியை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள், அரசு, அரசு உதிவி பெறுகின்ற அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் எனக் கூறப்படுகின்றது.

செயல்முறை

  • மாணவிகளின் விவரங்கள் அவர்களின் பொறுப்பாசிரியர்கள் மூலம் https://penkalvi.tn.gov.in என்ற பக்கத்தில் உள்ளீடு செய்யப்படுதல் வேண்டும்.
  • மாணவிகளின் கைப்பேசிக்கு ஓடிபி வரும்.
  • அதன்பின்பு மாணவிகளின் விவரங்களைப் பதிவு செய்தல் வேண்டும்.
  • இறுதியாகக் கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து விண்ணப்பம் நிறைவு பெறும்.

மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு 4 லட்சம்! மத்திய அரசின் அருமையான திட்டம்!!

எனவே, விருப்பமும், தகுதியும் உள்ள மாணவிகள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள். அனைத்து ஆவணங்களையும் தங்களுடனேயே எடுத்துச் சென்று விண்ணப்பத்தினைச் சரிவரப் பூர்த்திச் செய்து கொடுக்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.

மேலும் படிக்க

KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!

பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு!!

English Summary: Rs.1,000 per Month Scheme! How to Apply Today? Full details Inside!
Published on: 25 June 2022, 10:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now