1. மற்றவை

KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!

Poonguzhali R
Poonguzhali R
Accumulating Offers for Kisan Credit Card Holders!

கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்குச் சிறப்பு உதவிகள் வழங்க மத்திய அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. என்னென்ன சிறப்பு சலுகைகள்?, என்னென்ன உதவிகள்? முதலானவை குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

கிராமப்புறப் பகுதியில் வசித்து வருபவரா நீங்கள்? அதோடு உங்களிடம் கிசான் கிரெடிட் கார்டு இருக்கா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத் தான். கிராமப்புற மக்களின் வருமானத்தினை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் இரண்டும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றன.

மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அந்த வகையில் கிராமங்களில் உள்ள மக்களின் வருவாயை அதிகரிக்க கிசான் கிரெடிட் கார்டு (KCC) வைத்திருப்பவர்களுக்கு எளிதாகக் கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க: பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு!!

 

பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் (CEO) நடந்த கூட்டத்தில், தொழில்நுட்பத்தினை மேம்படுத்த பிராந்தியத்தின் கிராமப்புற வங்கிகளுக்கு உதவிகளை நல்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கூட்டத்திற்குப் பிறகு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பேசுகையில், கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை நிதியமைச்சர் மதிப்பாய்வு செய்து, இந்தத் துறைக்கு நிறுவனக் கடன்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து விவாதித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!

நாட்டில் மொத்தம் 43 பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRB) இருக்கின்றன. இந்த வங்கிகளில் மூன்றில் ஒரு பங்கு, குறிப்பாக எடுத்துக் கொண்டால் வடகிழக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் இருக்கின்ற வங்கிகள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றினுடைய மூலதனத் தேவையைப் பூர்த்திச் செய்ய அதிக நிதியானது தேவைப்படுகிறது.

மேலும் படிக்க: TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!

இந்த வங்கிகள் அனைத்தும் RRB சட்டம், 1976 இன் கீழ் உருவாக்கப்பட்டு, சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறக் கைவினைஞர்களுக்கு கடன் மற்றும் இதர வசதிகளை வழங்குவதன் பொருட்டுத் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை மேம்படுத்த அரசு தற்பொழுது நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவற்றின் வாயிலாக கிராமப்புற மக்களுக்கு அதிக உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மீன்பிடி மற்றும் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள்  கிசான் கிரெடிட் கார்டைப் பெற்று வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க

உச்சம் தொட்ட சின்ன வெங்காய விலை! விவசாயிகள் மகிழ்ச்சி!!

இன்றைய செய்திகள்: தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

English Summary: Kisan Credit Card Update: Accumulating Offers for Kisan Credit Card Holders! Published on: 08 July 2022, 11:55 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.