Health & Lifestyle

Saturday, 24 July 2021 05:09 PM , by: T. Vigneshwaran

Bharotta

பரோட்டா என்பது அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான உணவு . அதிலும் இளைஞர்கள், குழந்தைகளுக்கு பரோட்டா குருமா இருந்தால் மகிழ்ச்சி தான். பரோட்டா என்னும் மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டி வகை, வாய்க்கு மிகவும் சுவையானதாக இருக்கும், ஆனால் உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக்கூடியது.

மைதா மாவில், பரோட்டா தவிர பூரி, சமோசா ஆகிய தயாரிப்புகளுக்கு தயாரிக்கப்படுகிறது. இது தவிர பீட்ஸா, பர்கர், மோமோஸ், சில வகை போன்றவற்றை தயாரிக்கவும் மைதா அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மிக சுவையான உணவுகளான இவற்றை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது.

மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகையில், மைதா கோதுமை மூலம் தயாரிக்கப்படுகிறது என்றாலும், அதனை தயாரிக்கும் செயல்முறை மாறுபட்டது. கோதுமை மாவு தயாரிக்கும் போது, ​​கோதுமையின் மேல் உள்ள தவிடு அகற்றுவதில்லை.  இவை நம் உடலுக்கு மிக முக்கியமான  நார்சத்தை கொடுக்கிறது. ஆனால், மைதா மாவு தயாரிக்கும் போது  நார்ச்சத்து முழுமையாக நீக்கப்படுகிறது.

டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகையில், நார்ச்சத்து இல்லாத நிலையில், சாப்பிட்டவுடன் அது குடலில் ஒட்ட ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சினையும் ஏற்படுகிறது. மேலும் இது அஜீரணத்திற்கும் வழி வகுக்கிறது.

எலும்புகள் பலவீனமாகும்

மைதா கோதுமையிலிருந்து தயாரிக்க்கும் போது, மாவின் அனைத்து புரதங்களும், நார் சத்துக்களும் அழிந்து போகின்றன. இதன் காரணமாக இது அமிலமாக மாறி செயல்படுகிறது.  இது எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சுகிறது, மற்றும் இது எலும்புகளை பலவீனமாக்குகிறது.

மைதாவை உட்கொள்வதால் ஏற்படும்  பிற பாதிப்புகள்

மைதாவில் அதிக அளவு மாவு சத்து உள்ளது, இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும் மற்றும் படிப்படியாக இரத்தத்தில் கெட்ட கொழுப்பு தேங்கி விடும் மற்றும் ட்ரைகிளிசரைட்டின் அளவும் அதிகரிக்கத் தொடங்குகிறது. அதனால், நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், மைதாவை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

அதிக அளவில் மைதா மாவு கேடு விளைவிக்கும்

மைதா மாவு அதிக அளவில் உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும். இதன் காரணமாக குளுக்கோஸ் இரத்தத்தில் சேரத் தொடங்குகிறது. இது உடலில் ரசாயன எதிர்வினைகளை உருவாக்குவதன் மூலம் கீல்வாதம் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து வருகிறது.


மேலும் படிக்க:

ஆரோக்கிய நொறுக்குத்தீனியாக உடல்நலம் காக்கும் தாமரை விதை!

உடலை நீர்ச்சத்துடன் பாதுகாக்க பின்பற்றவேண்டிய குறிப்பு !!

தித்திக்கும் தேன் கலந்த வெந்நீரின் திகட்டாத பலன்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)