1. வாழ்வும் நலமும்

தித்திக்கும் தேன் கலந்த வெந்நீரின் திகட்டாத பலன்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

இயந்திரமயமான வாழ்க்கை, நம் வருமானத்தை வளமானதாக மாற்ற உதவுகிறது என்றபோதிலும், உடலுக்குப் பலவித நோய்களையும் வரவேற்காமல் இல்லை.

பல பிரச்னைகள் (Many problems)

உடல் உழைப்புக் குறைவதால், உடல் எடை அதிகரித்தல், எப்போதும் லேப்-டாப் முன்பே அமர்ந்திருப்பதால், உடல் எடை அதிகரித்தல், சரியான நேரத்திற்கு சாப்பிடாதிருப்பதால், அல்சர் தொந்தரவு இப்படி பலப் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஆனால் இவை அனைத்திற்கும் இடம்கொடுக்காமல் இருக்க, அனுதினமும் வெறும் வயிற்றில் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிடுவது அவசியமாகிறது.

பல நன்மைகள் (Many benefits)

அவ்வாறு வெந்நீருடன் தேனைக் கலந்து குடித்தால், எண்ணற்ற நன்மைகள் மற்றும் பலனைப் பெறலாம். ஏனெனில் தேனும் மருத்துவ குணம் நிறைந்த ஓர் மருத்துவப் பொருள் ஆகும். அத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் இன்னும் மேம்பட்டும்.

எனவே தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் (Honey) கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

வாயுத்தொல்லை  (Gastric problem)

நீங்கள் வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபட இந்த தேன் கலந்த நீர் உதவும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் (Hot Water) தேனைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பாக்டீரியா (Bacteria) 

தேனில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் சக்தி உள்ளது. அதனால் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

டாக்ஸின்களை நீக்க (To remove toxins)

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்தால் உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். அதிலும் அந்நீருடன் சிறிது எலுமிச்சையை சேர்த்துக் கொண்டால், சிறுநீர் பெருக்கத்தினால், எளிமையாக டாக்ஸின்களை வெளியேற்றலாம்.

பொலிவான சருமம்

தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து, சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும்.

அனைவரும் பருகலாம் (Everyone can drink)

உடல் எடையைக் குறைக்க மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தைத் தற்காத்துக்கொள்ளவும் தேன் கலந்த வெந்நீரைப் பருகுவதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

மேலும் படிக்க...

முட்டையில் இருக்கும் சூப்பர் சத்துக்கள் என்ன தெரியுமா?

தாளிக்க மட்டும் பயன்படும் கடுகில் இருக்கும் நாம் அறியாத மருத்துவ குணங்கள்

தைராய்டு பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள் – அனைவரின் உடலிலும் இருக்கும் தைராய்டு சுரபி

English Summary: Undoubted benefits of hot water mixed with honey! Published on: 22 July 2021, 09:19 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.