மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 July, 2022 5:41 PM IST
Acidity: 10 Home Remedies for Acidity!

அசிடிட்டி அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அவதிப்படும், ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஒருவர் ஏன் அசிடிட்டியால் பாதிக்கப்படுகிறார் என்றால் உடலின் செரிமானப் பாதை சரியாகச் செயல்படாமல் இருப்பதால் ஏற்படுவதாகும். பித்தம் அல்லது வயிற்று அமிலங்கள் உணவுக்குழாய் அல்லது உணவுக் குழாய்களுக்குள் மீண்டும் பாயச் செய்யும் போது, அசிடிட்டி ஏறபட வாய்ப்பு உள்ளது. அந்த நிலையில் அசிடிட்டிக்கான நிபுணர்கள் கூறும் 10 குறிப்புகளை இப்பதிவு விளக்குகிறது.

மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!

அசிடிட்டியின் பொதுவான அறிகுறிகள்

மார்பு, வயிறு அல்லது தொண்டையில் வலி மற்றும் எரியும் உணர்வு
வாயு
அஜீரணம்
கெட்ட சுவாசம்
மலச்சிக்கலால் பாதிக்கப்படலாம்
சாப்பிட்ட பிறகு குமட்டல்
வயிற்றில் கனமான உணர்வு ஏற்படுதல்

மேலும் படிக்க:  IRCTC முன்பதிவில் புதிய மாற்றம்! இப்போதே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

அசிடிட்டிக்கான காரணங்கள்:

அதிகமாக சாப்பிடுவது
நேரம் தவறி சாப்பிடுவது
உணவைத் தவிர்ப்பது
அதிகப்படியான டீ, காபி, குளிர் பானங்கள் உட்கொள்வது
காரமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது
மது அருந்துதல்
புகைபிடித்தல்
அதிக மன அழுத்தம்
போதுமான தூக்கம் இல்லாமை
வயிற்றுப் புண்கள்

மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம்! மத்திய அரசின் அருமையான திட்டம்!!

அசிடிட்டிக்கான வீட்டு வைத்தியம்

நீங்கள் அடிக்கடி அசிடிட்டி அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறீர்களா மற்றும் ஆன்டாக்சிட்களை உட்கொள்வதால் சோர்வாக இருக்கிறீர்களா? சரி, இப்பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் இயற்கை வைத்தியங்கள் உள்ளன, வாருங்கள் பார்ப்போம். ஆயுர்வேதம், இந்த நிலைக்கு பல தீர்வுகளை பரிந்துரைக்கிறது. இந்த வீட்டு வைத்தியம் பக்கவிளைவுகள் இல்லாதது மட்டுமின்றி, அதிவேக அமிலத்தன்மையால் ஏற்படும் அசௌகரியத்தையும் ஒரு நொடியில் தீர்க்க உதவும் என்பது குறிப்பிடதக்கது.

வாழைப்பழங்கள்: இவை பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். இவை வயிற்றில் அமில உற்பத்தியின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. பழத்தில் உள்ள சில கூறுகள் உங்கள் வயிற்றில் சளி உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது அதிகப்படியான அமில உற்பத்தியின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தைத் துரிதப்படுத்தவும், அமிலத்தன்மை மீண்டும் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

துளசி: துளசி இலைகள் உங்கள் வயிற்றைத் தூண்டி அதிக அமிலத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது ஆண்டிஅல்சர் பண்புகளைக் கொண்டுள்ளது. அதோடு, இரைப்பை அமிலங்களின் விளைவைக் குறைக்கிறது.

குளிர்ந்த பால்: பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது அமில உருவாக்கத்தைத் தடுக்க உதவுகிறது. அதோடு, அதிகப்படியான அமிலத்தை உறிஞ்சி, அமிலத்தன்மையின் அறிகுறிகளைக் குறைக்கிறது. குளிர்ச்சியாக இருப்பதால், அமில வீக்கத்தின் போது வயிறு எரியும் உணர்விலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. பால் குளிர்ச்சியாகவும், சர்க்கரை போன்ற சேர்க்கைகள் இல்லாமல் இருப்பதும் அவசியமாகும். மருந்தை இன்னும் பயனுள்ளதாக மாற்ற, நீங்கள் அதை ஒரு ஸ்பூன் நெய்யுடன் கலக்கலாம்.

சான்ஃப் அல்லது சோம்பு: இது மிகவும் சக்திவாய்ந்த அல்சர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. அதோடு, மலச்சிக்கலை நீக்குகிறது. இது வயிற்றின் உட்புறத்தைக் குளிர்விக்க உதவுகிறது. ஒரு சில சான்ஃப் விதைகளை வெறுமனே மென்று சாப்பிடுவது அசிடிட்டியின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். நீண்ட காலத் தீர்வாக, ஒரு சில விதைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு இரவு விட்டு, பகலில் இந்த தண்ணீரைக் குடிக்கவும்.

ஜீரா: இது உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. அதோடு, வாயு மற்றும் பிற இரைப்பைப் பிரச்சனைகளை விடுவிக்கிறது. அமிலத்தன்மையைப் போக்க ஜீராவின் சில விதைகளை மென்று சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து, அது ஆறியதும் கரைசலை குடிக்கலாம்.

கிராம்பு: இது செரிமானத்திற்கு உதவுகிறது. அசிடிட்டியின் அறிகுறிகளைக் குறைக்கிறது. இந்த மசாலா கார்மினேடிவ் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் பெரிஸ்டால்சிஸை மேம்படுத்த உதவுகிறது.

ஏலாக்காய்: ஆயுர்வேத நூல்களின்படி மூன்று தோஷங்களான கபா, பித்தம் மற்றும் வாதத்தை சமநிலைப்படுத்த அறியப்பட்ட இலைச்சி(ஏலாக்காய்), செரிமானத்தைத் தூண்டுவதாகவும், வயிற்றுப் பிடிப்புகளைப் போக்குவதாகவும் அறியப்படுகிறது. இது வயிற்றில் உற்பத்தியாகும் அதிகப்படியான அமிலத்தின் விளைவுகளைத் தடுக்க உதவும் வயிற்றின் உட்புறப் புறணியையும் ஆற்றுகிறது. அமிலத்தன்மையைப் போக்க இரண்டு ஏலக்காயை (தோலுடன் அல்லது இல்லாமல்) நசுக்கி, பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

புதினா இலைகள்: புதினா வயிற்றின் அமில உள்ளடக்கத்தை குறைக்க உதவுகிறது. அதோடு, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது ஒரு குளிரூட்டும் விளைவைக் கொண்டுள்ளது. அவற்றை ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் சேர்த்து, குளிர்ந்த பிறகு இந்த தண்ணீரை குடிக்கவும்.

இஞ்சி: இது செரிமானத்தை அதிகரிக்கச் செய்வதோடு மற்ற வயிற்றுக் கோளாறுகளையும் தடுக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது சளி சுரப்பை ஊக்குவித்து உங்கள் வயிற்றில் அமிலத்தின் விளைவைக் குறைப்பதன் மூலம் உங்கள் வயிற்றை புண்களிலிருந்து பாதுகாக்கிறது. அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெற, ஒரு சிறிய துண்டு இஞ்சியை மென்று சாப்பிடுங்கள். அதுவும் காரமாகத் தெரிந்தால், தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயத்தைக் குடிக்கவும். மற்றொரு தீர்வு இஞ்சியை நசுக்கி, ஒரு சிறிய துண்டு வெல்லத்துடன் கலந்து உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க

முடி உதிர்வு-க்கான 7 தீர்வுகள்? வீட்டுப் பொருட்களே போதும்!

உடல் எடையை சரசரவெனக் குறைக்க உதவும் தோசை! ரெசிபி உள்ளே!!

English Summary: Acidity: Easy Home Remedies for Acidity!
Published on: 18 May 2022, 03:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now