
IRCTC: New Change in IRCTC Reservation!
இரயில் பயணங்களில் லோயர் பெர்த் பெறவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அது பல நேரங்களில் நிறைவேறுவது இல்லை. இந்த நிலையினைப் போக்கத்தான் IRCTC ஒரு புதிய விதியினை வெளியிட்டுள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!
ரயில் பயணம் மற்ற வழித்தட பயணங்களை ஒப்பிடும் போது சௌகரியமானதாக இருக்கின்றது. ஏதேனும் சுற்றுலா செல்ல வேண்டும் என்றாலோ அல்லது குறிப்பிட்ட நாளில் வேறெங்கும் செல்ல வேண்டும் என்றாலோ ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தேவையான இருக்கையை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க: TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!
அவ்வாறு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்பொழுது மூத்த குடிமக்கள் பலர் கோரிக்கை விடுத்தும் பல நேரங்களில் கீழ் பெர்த் கிடைப்பதில் சிக்கல் இருந்துகொண்டு வருகின்றது. இதுகுறித்து எழுந்த புகார்களின் அடிப்படையில் தற்போது இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்திருக்கின்றது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
இந்திய ரயில்வேயில் பயணிக்கும் பயணி ஒருவர் ட்விட்டரில் ரயில்வேயிடம் ஒரு கேள்வியை எழுப்பியதை அடுத்து இந்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கேட்கையில், இருக்கை ஒதுக்கீட்டை நடத்துவதில் என்ன லாஜிக் இருக்கின்றது எனவும், மூன்று மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் முன்னுரிமையில் டிக்கெட் புக் செய்தபோது, அப்போது 102 பெர்த்கள் இருந்தும்தான் கிடைத்தது எனவும் கூறி, இதனைச் சரிசெய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
மேலும் படிக்க: TET/TRB: தற் மிடில் பெர்த் கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இந்தக் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்த IRCTC, லோயர் பெர்த் மூத்த குடிமக்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கானது எனக் கூறியிருக்கிறது. அதோடு, கீழ் பெர்த்கள் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கானது என்வும், இரண்டுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் அல்லது ஒருவர் மூத்த குடிமகன் மற்றும் மற்றவர் மூத்த குடிமகன் இல்லை என்றால், அதை அமைப்பு கருத்தில் கொள்ளப்படாது என IRCTC கூறியுள்ளது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!!
இந்த நிலையில் மேலும் கூறுகையில், 2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைக்கும் நோக்கத்தில் மூத்த குடிமக்கள் உட்பட பல வகை மக்களின் சலுகை டிக்கெட்டுகள் நிறுத்தப்பட்டன. கொரோனா வைரஸால் இறப்பு ஆபத்து அதிகமாக இருந்ததால், மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!
Share your comments